Saturday, March 25, 2017

கள்ளர் - என்பதன் பெயர் காரணம்




இச்செந்தமிழ் நிலத்தில் வடக்கில் வேங்கடமலையும் தெற்கில் குமரியாறும், கிழக்கிலும், மேற்கிலும் கடல்களை எல்லையாகக் கொண்ட இத்தமிழ் நிலம் முடியுடை மூவேந்தர் சேர, சோழ, பாண்டிய, பல்லவ  மன்னரர்களால் ஆளப்பட்டு வந்திருக்கிறது.

கள்ளர்கள் தமிழர்களின் ஆதிகுடிகளான நாகர்களின் வழித்தோன்றல் தான் இந்த கள்ளர்கள். கள்ளர்களின் வழித்தோன்றல்கள் தான் சோழ, சேர, பாண்டிய, பல்லவ மற்றும் முத்தரையர். (இதற்கான ஆதாரங்கள் அடுத்த அடுத்த பக்கத்தில் காணலாம் )


தமிழ்நாட்டில் சோழ, சேர, பாண்டிய, பல்லவ மன்னர்களுக்கு பிறகு  கி.பி 13 ஆம் நூற்றாண்டில்  இருந்த தமிழக வரலாற்றிலும் மக்களாலும் அறியபட்ட சிறந்த தமிழ்  மன்னர்கள்

* ஸ்ரீ மறவன் கிழவன் சேதுபதி
* ஸ்ரீ கள்வன் இரகுநாதராய தொண்டைமான்
* ஸ்ரீ மறவன் பூலித்தேவர்
* ஸ்ரீ ராணி வேலுநாச்சியார்
* ஸ்ரீ அகமுடைய மருது பாண்டியர்
* ஸ்ரீ கள்வன் வாளுக்கு வேலி அம்பலம்.

🌹 கள்ளர்கள் பற்றிய வரலாற்று ஆய்வு செய்திகள் :

🌹 தனி சிறப்பு :

1) எந்த இனத்திற்கும் எந்த சாதியினரும் இல்லாத இவர்களிடம் உள்ள பட்டங்கள்.

2) இவர்களது தனிப்பட்ட வளரி ஆயுதமும்.

3) இவர்கள் வாழும் பகுதிகளின்  நாடு என்ற அமைப்புகள்.

4) கள்ளர் வீரவிளையாட்டு 'சல்லிக்கட்டு'.

5) தமிழ் மொழி மீதுள்ள ஆர்வம் (நான்காம் தமிழ் சங்கம், கரந்தைச் தமிழ் சங்கம்).

6) நாட்டின் புற மண உட்பிரிவுகள் :  வகுப்பு, தெரு, கரை, கிளை என்பன.

7) தலைவன்பட்டம்-அம்பல(க்)காரன், நாட்டான்

8) குலப்பட்டம்- தொண்டைமான், இராசாளி, நாட்டார், வன்னியன், பிள்ளை, அம்பலகாரன், முத்தரையன், மாளுசுத்தியான், காளிங்கராயன், சம்புவராயன், வாண்டையார், சேர்வைகாரன், சோழகன், பழுவேட்டரையர் மேலும் பல பட்டங்கள்.

இப்படி சிறப்புகளை பெற்ற ஒரு சமுதாயம் இழிபொருள் தரும் பெயரைத் தங்கள் குலப்பெயராக ஏற்பரா?

கள்ளர், கள்வர் சொற்கள் உயரிய பொருளைத் தருவதை நோக்க தலைவர், அரசர், கரியவர், உளம்கவர் பண்பாளர் என்று பொருள் கொள்ளலாம். இவ்வளவு சிறப்புப் பொருள் இருக்கும் போது வாழ்வாங்கு வாழ்ந்து சிறப்பு பெற்ற ஒரு சமுதாயம் இழிபொருள் தரும் பெயரைத் தங்கள் குலப்பெயராக ஏற்பரா? ஏன்று சிந்தித்தால் அவர்களுக்கும் கள்ளர் என்ற சொல் மேற்கண்ட உயர் பொருளிலேயே வழங்கி இருத்தல் வேண்டும். மேலும் அவர்கள் எந்த தொல்குடியை சேர்ந்தவர்கள் என்பதைக் காண்போம்.
கள்ளர்களுக்கு எம்முறையில் இப்பெயர் வழங்கப்படுகிறது என்று சிறிது காண்போம்.

* "கள்வனென் கிளவி கரியோனென்ப” – திவாகரம்

* "கடகரிப்பெயரும், கருநிறமகனும், கற்க்கடக விராசியும் ஞெண்டும் கள்வனென்” – பிங்களந்தை

எனவே கள்வன் எனும் சொல் கருநிறம் உடையோன் என்ற பொருளில் வழங்கி வந்துள்ளது.

*  ஆரியரின் இருக்குவேத மந்திரங்கள் தமிழரைக் கரியோர், பகைவர் என்று கூறுகின்றன. இந்திரன் கரியோன் எனப் பெயர் பெற்றவனாவான் அது பற்றியே கள்ளர்கள் சிலர் தங்களை இந்திர குலத்தார் என்று கூறி வருகின்றனர். சோழர்களை கருநிறம் பற்றியே மால் என்று அழைக்கின்றனர்.

* கள்ளர் என்னும் சொல் மிக உயர்ந்த சொல்லாகக் கருதி நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடியுள்ளனர்.

"உள்ளங்கவர் கள்வன் என்று என சிவபெருமானை சம்பந்தரும்"

"திருமாலை, கள்ள மாதவா கேசவா,
காரகத்தாய் கார்வானத்துள்ளாய் கள்வா வரி பொழி லாங்கந்தனுள் கள்வனார், கிடந்த வாறும் என திருமாலை திருமொழிப்பிரபதங்களில் ஆழ்வார்களும் குறிப்பிடுகின்றனர்"