சில தற்குறிகளின் கேள்விகள் கள்ளன் என்றால் திருடன், திருடன் எப்படி மன்னன் ஆகமுடியும்.
சரி இவர்கள் சொல்வது போல திருடன் மன்னன் ஆகமுடியாது, ஆனால் மன்னன் எல்லோரும் திருடனாக தான் இருக்கிறார்கள்.
சீவகசிந்தாமணியில் 741ம் செய்யுளில் உச்சிமேற்புலவர் நச்சினார்கினியர் மற்றும்
தமிழ் தாத்தா ஊ.வே. சாமிநாத ஐயர் கள்ளர் என்றால் அரசன் என்பதை தெளிவாக சொல்லியுள்ளார். மேலும் நாம் நிறைய ஆதாரங்கள் தந்தாகிவிட்டது. ஸ்ரீ கள்வர் கள்வ ராஜராஜன் என்பவன் பேரரசனே.
உலகத்தில் வெற்றி கொண்ட மன்னர்கள் முதலில் செய்வது அந்த நாட்டின் செல்வங்களை கொள்ளையடிப்பது. அந்த செல்வங்களை வைத்து கோயில், கோட்டைகள் கட்டுவது. இதுக்கு பெயர் திருட்டு என்று சொல்வது இல்லை. அவன் எவ்வளவு கொள்ளையடித்து வருகின்றானோ அதுவே அவன் வெற்றியின் அளவு அதுவே வரலாறு.
ஆனால் தங்களை மன்னர் பரம்பரை என்று சொல்கின்றவர்களின் மன்னர்கள், ரொம்ப நல்லவர்கள், அவர்கள் திருடவோ, கொள்ளையில் ஈடுபடவில்லை. அந்த மன்னர்கள் வயலில் இறங்கி வேளை செய்தார், மக்களிடம் குறைந்த வரிவசூலித்தார், பிறநாடுகளைக் வென்று வெறும் கையுடன் கொடியை மட்டும் அங்கே நட்டு விட்டு திரும்பி வந்தார்கள். இதில் அவர்களது சொந்த பணத்தை கொண்டு கோயில், கோட்டை கட்டினார்.
தம்பிமாரே கோட்டை இல்லை கோட்டை கதவுகள் கூட போட முடியாது.
இதுவரை பிற நாட்டு செல்வங்களை கொள்ளை அடிக்காத மன்னர்கள் வரலாற்றில் எங்கும் இல்லை. எல்லோரும் போரில் பெரும் கொள்ளையிலேயே ஈடுப்பட்டிருந்தனர்.
பெரும் கொள்ளையில் ஈடுபட்ட மன்னர்கள் வரலாற்றில் அதில் சிலவற்றை பார்ப்போம்
1) ராஜேந்திர சோழன்
கங்கை நீரை மட்டுமல்ல, தெய்வத்திரு உருவங்களும் பிடுங்கிக் கொண்டு வரப்படுகின்றன. பெண்டிர் பண்டாரமும் அள்ளிக் கொண்டு வருகிறான். சோழ தேசம் செழிப்பாகியது. தான் பிடித்து வந்த சேர தேசத்து, பாண்டிய தேசத்து வீரர்களாலும் மிகப்பெரிய ஏரி வெட்டுகிறான். கங்கை நீர் அந்த ஏரியில் கலக்கிறது. அதற்கு கங்கை கொண்ட சோழப் பேரேரி என்று பெயர் வருகிறது. இப்பொழுது பொன்னேரி என்று அழைக்கப்படுகிறது.
யானைகளாலும், பசுமாடுகளாலும், அடிமை வீரர்களாலும் கங்கை கொண்ட சோழபுரம் நிரம்பி வருகிறது. அதற்கு அந்த பேரேரி வசதியாக வாழ மிகவும் உதவுகிறது.
பரதகண்டத்திலேயே ராஜேந்திர சோழன் ஒருவன்தான் தடுத்து போர் செய்யாது, மற்றவரை அடித்து அடித்து போர் செய்தவன். கிழக்கே வணிகர்களுக்கு தொந்தரவு இருப்பதால் அங்குள்ள ஸ்ரீவிஜயம், இலங்காசோகம், கடாரம், காம்போஜம் எல்லாவற்றையும் அடித்து பிடுங்கியவன். பெரும் பொருள் கொண்டு வந்து சோழ தேசத்தை நிரப்பியவன். இன்றைய ஜாவா, சுமித்ரா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, இந்தோனேஷியா எல்லாம் அவனால் தாக்கப்பட்டவை. அங்கிருந்து தோரணங்களும், யானைகளும், பெரும் நிதிக்குவியல்களும் சோழ தேசம் வந்து சேர்ந்தன.
இப்படி இந்த பெரும் கொள்ளையை (களவு ) பாலகுமாரன் பெருமையாக எழுதி இருக்கிறார் தன்னுடைய வரலாற்று ஆய்வில்.
.
2) மகேந்த்ரவர்மனின் மகன் நரசிம்மவர்மன் கி.பி.642ல் வாதாபி நகர் மீது படையெடுத்தான். இப்படையில் ஒரு லட்சம் காலாட்வீரர்களும் ,ஐம்பதாயிரம் குதிரை வீரர்களும் ,பன்னிரெண்டாயிரம் யானைகளும் இருந்ததாக கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் கூறப்படுகின்றன.இம்மாபெரும் படையெடுப்பை படைத்தளபதி பரஞ்சோதி முன் நின்று நடத்தி வாதாபி நகரை எரித்து அங்கு உள்ள மொத்த செல்வங்களையும் கொள்ளையடித்தனர்.
சிறுத்தொண்டர் என்னும் பரஞ்சோதியார் நரசிம்மவர்மப் பல்லவனின் படைத்தலைவர் தொன்னகரைத் துகளாக்கி, அங்கிருந்த கணபதியைக் கொண்டு வந்து தாம் வழிபட்ட திருச்செங்காட்டங்குடியில் நிறுவினார். இவருக்கு வாதாபி கணபதி என்று பெயர்.
மற்றவர்கள் கொள்ளையில் ஈடுபடும் போது பரஞ்சோதியார் மட்டும் கொள்ளையில் ஈடுபட விருப்பம் இல்லை அவர் சிறிய திருட்டில் ஈடுபட்டு வாதாபி கணபதி மட்டும் கொண்டு வந்தார்.
இந்த கொள்ளையை (களவு) கல்கியின் சிவகாமி சபதத்தில் கல்கி வரி வரியாக பெருமையாக எழுதி வேறு இருக்கிறார்.
3) வீரர்கள் மற்ற நாட்டில் செய்யும் கொள்ளை, திருட்டை சங்க இலக்கியத்தில் பெருமை பேசுகிறது.
“நீயே, பிறர்நாடு கொள்ளும் காலை அவர்நாட்டு
இறங்குகதிர்க் கழனிநின் இளையரும் கவர்க.
நனந்தலைப் பேர் ஊர் எரியும் நைக்க
நின் நெடுவேல் ஒன்னார் செகுக்கினும் செகுக்க”
என்று பாண்டியன் நன்மாறனைக் காரிக்கண்ணனார் புறநானூறு 57இல் பாடுகிறார். “நீ பிறர் நாட்டைக் கைப்பற்றும்போது, உன் இளைஞர்கள் அவர் நாட்டுக் கழனிகளைக் கொள்ளையடிக்கட்டும். பெரிய ஊர்களைக் கொளுத் தினாலும் கொளுத்தட்டும். உன் வேலும் பகைவரைக் கொன்றாலும் கொல்லட்டும்” என்று சொல்வது போர்க் குற்றங்கள் இயற்றுவதைப் பாராட்டும் செயலே ஆகும்.
போர்த் தொடக்கத்தின்போது கவர்ந்து வரப்பட்ட கால்நடைகள் இறுதியில் வீரர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. பகைப்புலத்தில் கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்திலும் பங்களிக்கப்பட்டது. வெற்றிபெற்ற வீரர்களுக்குப் பொற்பூக்கள் வழங்கப்பட்டன. இறையிலி நிலங்களும் வழங்கப் பட்டன.
4) குலோத்துங்கன் பற்றி கலிங்கத்துப்பரணி கூறுவது :
வெற்றி கொண்ட அரசர் போர்க்களங்களில் கவரும் பொருள்களாகக் கூறப்படுவன யானை, குதிரை, ஒட்டகம், இரதம், செல்வம், முதலியவற்றோடு மகளிருமாம்.
கலிங்கப் போர்க்களத்தே,
"கைப்படு களிறும் மாவும் கணித்துரைப் பவர்கள் யாரோ’
என்றும்"
"நடைவ யப்பரி இரதம் ஓட்டகம்
நவநி திக்குலம் மகளி ரென்
றடைய அப்பொழு தவர்கள் கைக்கொளும்
அவைக ணிப்பதும் அருமையே’"
என்றும் கூறப்படுமாறு காண்க.
இவற்றுள் யானைகளைக் கவர்ந்து வருதலே பெருவெற்றியாகக் கருதப்பட்டதாகத் தெரிகிறது. குலோத்துங்கன் கருணாகரனுக்குக் கட்டளையிடுங்கால்,
"அளிஅ லம்புமத மலைகள் கொண்டனைமின்
அவனை யும்கொணர்மின் எனலுமே'"
எனக் கூறுமாற்றால் இது தெரிகிறது.
அரசர்கள் பகைவரை வென்றபின், தாம் பற்றிக்கொணர்ந்த அவர் தம் மகளிர் வாழ்வதற்கெனத் தனியிடத்தில் மாளிகை யமைப்பரென்றும், அது ‘வேளம்’ எனப் பெயர் பெறும் என்றும் தெரிகிறது.
"கடை திறப்பில்,
'மீனம்புகு கொடி மீனவர் விழி அம்புக ஓடிக்
கானம்புக வேளம்புகு மடவீர் கடைதிறமின்'"
என வருமாறு காண்க. குலோத்துங்கன் காஞ்சியில் செய்தமைத்த சித்திரமண்டபத்தே வீற்றிருந்தபொழுது,
"'தென்ன ராதிந ராதிப ரானவர்
தேவி மார்கள்தன் சேடிய ராகவே'"
5)1853 இல் கார்ல் மார்க்ஸ் பண்டைய இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றி எழுதிய கூற்று இது:
“பண்டைக்காலத்திலிருந்து ஆசியாவில் (ஆசியாவில் என்று மார்க்ஸ்
குறிப்பிடுவது இந்தியாவைத்தான்) மூன்று அரசாங்கத் துறைகள் இருந்து வந்திருக்கின்றன.
ஒன்று நிதித் துறை, அதாவது உள்நாட்டுக் கொள்ளை.
இரண்டு போர், அதாவது வெளிநாட்டுக் கொள்ளை.
மூன்றாவது பொதுப்பணித் துறை. பாசனவசதிகள் முதலியவற்றை
அமைத்துத் தருதல்…
இந்தியாவின் கடந்த காலத்தின் அரசியல் தோற்றங்கள் மாறியிருப்பதாகத் தோன்றினாலும் அதன் சமூக நிலைமை
மிகப்பழங்காலத்திலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டு வரை மாறாமலே இருந்துவந்துள்ளது”.
போர் என்பதை வெளிநாட்டுக் கொள்ளை என்றே கார்ல் மார்க்ஸ் குறிப் பிடுவது இங்கு நோக்கத்தக்கது.
கோப்பெருஞ்சிங்கனும் இரண்டாம் ராஜராஜனும் போரிடும் சண்டையானாலும்,
அணுகுண்டினால் இருபெரு நகரங்களையே அழித்து இறுதிகண்ட உலகப் போரானாலும்,
அடிப்படை நோக்கம் பொருளாதாரம் தான் என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. இந்தப் பொது மானிடநிலைக்குத் தமிழகத்தின் நிலையும் வேறாக இருந்திருக்க இயலாது.
6) நாட்டைக் காப்பாற்றுவது அரசர்களின் பணி என்பதை அரசர்களும் யாவரும் ஏற்றுக்கொண்ட போதிலும், தங்கள் எல்லைக்குட்பட்ட பாலைநிலங்களில் வாழ்ந்த, கொள்ளையடித்து வாழ்க்கை நடத்திவந்த எயினர், வேடுவர் போன்றவர்களை அரசர்கள் கண்டித்துத் திருத்தியதாகவோ தண்டித்ததாகவோ எங்குமே இல்லை. மாறாக, அவர்களைத் தக்க நேரத்தில் படைகளில் சேர்த்துக் கொண்டதற்கான சான்றுகளே உள்ளன.
7) வெள்ளையன் இந்தியாவிற்காக இங்கிலாந்திலிருந்து தங்கத்தையும் வைரம் முத்து பவளம் கோதுமை அரிசி இறக்குமதி செய்து ஏழைகளின் பசியா தீர்த்தான். அந்த வெள்ளைக்காரனே இங்க உள்ளதை திருடி அவன் நாட்டுக்கு கொண்டு போனான். அவன் இங்கு மறப்போர் செய்த முக்குலத்தோரை வெள்ளைக்காரன் அரசாங்கம், குற்றச் சாதியினர் என்று கூறி அவமரியாதை செய்தது.
தனிமனிதக் கொலை, கொள்ளையைக் கேவலமாக நினைக்கின்ற இக்காலப் பண்பட்ட சமூகங்கள், ஒட்டுமொத்தமான கொள்ளை, மனிதப் பேரழிவைப் போர் என்ற பெயரில் வரவேற் கின்றன
ஸ்ரீ கள்வர் கள்வன் ராஜராஜ சோழன் வெற்றியினால் கொள்ளையடித்து கொண்டுவந்து கட்டிய கோயில் தான் தஞ்சை பெரிய கோயில். களவும் காவலும் தமிழ் மண்ணில் கொண்டாடப் பட்டதே.





