Thursday, October 18, 2018

மானுடவியல் பார்வையில் இராஜ இராஜ சோழத்தேவர்


அக்டோபர்20 தெற்காசியாவை கட்டியாண்ட தமிழினத்தின் பார் போற்றும் பெருமை வாய்ந்த இராஜ இராஜ சோழத்தேவரின் குலத்தைப் பற்றி பதிவு செய்யுங்கள் என்று என்னை பல நண்பர்களும்,உறவினர்களும் கேட்டுக்கொண்டனர்.
இராஜ இராஜ சோழத்தேவர் என்ன குலத்தை சேர்ந்தவர் என்பதை பல ஆய்வாளர்கள் கல்வெட்டு ரீதியாகவும்,இலக்கியரீதியாகவும் பல முறை கள்ளர் இனத்தை சேர்ந்தவர் என்று குறிப்பிட்டும்.
சில கூட்டத்தினர் அவருடைய குலத்தை தவறாக சித்தரித்து வருகின்றனர்.
நான் இங்கு கல்வெட்டைப் பற்றியோ,இலக்கியத்தை பற்றியோ பேச போவதில்லை.



மாறாக மானுடவியல் ரீதியாக இராஜ இராஜ சோழத்தேவர் எந்த குலத்துடன் சம்பந்தப்படுகிறார் என்பதையே விவரிக்க விரும்புகிறேன்.
சோழ மன்னர்கள்,தொண்டைமான்களின் சிலையை அனைவரும் உற்று நோக்கினால் அந்த சிலைகளில் உள்ள முக அமைப்பில்,
காதுகள் மட்டும் தோள்பட்டை தொடும் அளவிற்கு நீளமாக வளர்ந்து அதில் வளையமும் கோர்க்கப்பட்டிருக்கும்.
இப்படிப்பட்ட காது தோற்றம்
கரிகாலச் சோழன்
இராஜ இராஜ சோழத்தேவர்
கருணாகர தொண்டைமான்
வைத்தியலிங்க தொண்டைமான்(பட்டமங்கலம்)

என அனைவருக்கும் காதுகள் நீளமாக வளர்ந்திருக்கும்.
இப்போது அனைவரின் மனதில் எழும்பும் கேள்வி இதற்கும் இப்போது உள்ள குடிகளுக்கும் என்ன சம்பந்தம் என்று எழும்....?
கிபி1950வரை தமிழ் சமூகத்தில் கள்ளர் பெருமக்களின் ஆண்கள் தங்களது குழந்தைகள் பிறந்த சில மாதங்களில் காதுகளை துளையிட்டு அதில் பனை ஓலையை சுருட்டி உள்ளே திணித்துவிடுவார்கள்.
அந்த பனை ஓலை கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து காதை கிழித்து பெரியதாக வளரும்.
தோள் பட்டை தொடும் அளவிற்கு வளர்ந்த பின்பு காதில் வலையங்களை தொங்கவிடுவார்கள்.
மேலும் கள்ளர் குல ஆண்கள் கோவம் உச்சத்திற்கு வரும் போது அந்த காதை இரண்டாக அறுத்துவிடுவதும் வழக்கம்.
கள்ளர் பெருமக்களின் இந்த வினோத வழக்கத்தை ஆங்கில ஆய்வாளர்கள் மிகவும் வியப்புடன் பதிவு செய்துள்ளனர்...!
மேலும் புகைப்பட ஆதாரத்துடன் இரண்டு சிறுவர்கள் நிற்பது போல் படமும் எடுத்துள்ளனர்.
இந்த காது வளர்க்கும் பழக்கம் தமிழ் சமூகத்தில் கள்ளர் பெருமக்கள் மட்டுமே பின்பற்றுகிறார்கள் என்பது ஆணித்தனமான உண்மை என்பது யாராலும் மறுக்க முடியாது.
சோழ,தொண்டைமானர்களின் மானுடவியல் பழக்கத்தை இன்றும் அவர்களின் வழித்தோன்றாலாகிய கள்ளர் பெருமக்கள் பின்பற்றுகிறார்கள் என்பது கொண்டாடப்பட வேண்டிய விடையம்.
இந்த பதிவை பார்த்தவுடன் சில கூட்டத்தினர் எங்கள் அப்பத்தாவும்,ஆயாவுன் காதில் தண்டட்டி போட்டு காது வளர்ப்பார்கள் என புதுக்கதை ஆரம்பிப்பார்கள்.
அவர்களுக்கு முன்னெச்சரிக்கையாக சொல்ல விரும்புவது ஆண்கள் வளர்த்தார்களா என்பதே மில்லியன் டாலர் கேள்விகள்........??????
அதே போல் இன்னொரு மானுடவியல் பார்வையாக இன்றும் கள்ளர் பெருமக்கள் பட்டப்பெயர்களான
மழவராயர்
வங்கார முத்தரையர்
நக்கன் காவடியர்(நாய் காவடியர்)
காடவராயர்
முனையத்திரியர்
தென் கொண்டார்
சோழங்கராயர்
மலையமான்
அதியமார்
அம்பலார்
அருண் மொழித்தேவர்
அல்லி நாடாழ்வார்
ஆரூராண்டார்
ஆற்காட்டரையர்
இராசாளியர்
இருங்களர்
இரும்பரையர்
ஈழத்தரையர்
உலகுடையார்
ஏனாதி கொண்டார்
கச்சிராயர்
கடாரம் கொண்டார்
காடுவெட்டியார்
கண்டர்
கண்டியர்
கத்திரியர்
காங்கேயர்
காளிங்கராயர்
கீருடையார்
குச்சிராயர்
கூழாக்கியர்
கேரளாந்தகன்
கொங்கரையர்
கொடும்புரையர்
கொற்றங்கொண்டார்
கொற்றாண்டார்
கோனேரின்மை கொண்டார்
சந்திரங்கொண்டார்
சம்புவராயர்
சாளுவர்
சிங்கநாடார்
சூரக்குடியார்
சூரியர்
செம்பியர்
செம்பிய முத்தரையர்
செம்பியரையர்
சேதிராயர்
சேர்வை
சேனாதியார்
சோழதேவர்
தஞ்சை கோண்
தானாதிபதியார்
திருவுடைதாங்கியர்
துறைகொண்டார்
தென்னவன்
தொண்டைமான்
நெடுங்கொண்டார்
படையாட்ச்சியார்
பட்டம்கட்டியார்
பண்டாரத்தார்
பல்லவராயர்
பாண்டிராயர்
பாலை நாட்டார்
பிச்சயர்
புலிகொடியார்
பேரரையர்
பொய்கையாண்டார்
பொன்மாரியார்
மண்கொண்டார்
மலையராயர்
மாவலியார்
மாளுவராயர்
மீனவராயர்
முடிகொண்டார்
முத்தரையர்
மூவரையர்
மெய்க்கன் கோபாலர்
வங்காரர்
வல்லங்கொண்டார்
வழுவாட்டியார்
வன்னியனார்
வாண்டையார்
வில்லவராயர்
வில்லவத்தரையர்
இதில் வரும் பட்டப்பெயர்கள் முறையே சோழர் காலத்து கல்வெட்டுகளிலும்,இலக்கியங்களிலும் அடிபடும் பெயர்கள்.

இந்த பட்டப்பெயர்கள் முறையே சோழர்களையும் அவர்களுடைய ஆட்சியை ஏற்றுக்கொண்ட குறு நில மன்னர்களும்,சிற்றரசர்களும்,மலையமான் நாட்டு மன்னர்களும்,சோழ நிர்வாகிகளும் தாங்கிய பெயர்களாகும்.
இந்த பட்டங்கள் எங்களுக்கும் உண்டு என்று கூறும் கூட்டத்தினருக்கு முன்னெச்சரிக்கையாக ஒன்றை கூறுகிறேன். மேற்கோள் காட்டிய அனைத்து பட்டப்பெயர்களும் அரசு ஆவணத்தில் உள்ள பட்டாவில் கள்ளர்களின் பெயருக்கு பின்னால் தாங்கி நிற்கிறது.
இந்த பட்டப்பெயர்கள் போக இன்னும் 2000 பட்டங்கள் உள்ளன.
இது போக ஏழுகிளை கள்ளர் சீமையில் உள்ள கள்ளர்களுக்கு சோழயான் கிளை என தனியாக ஒரு கிளையே உள்ளது.
மேலும் சோழர்களின் கூற்றம்,நாட்டு அமைப்பை இன்றும் கிளை வழிக்கள்ளர்கள் முத்தூற்கூற்றத்தையும்,14 நாட்டு அமைப்பையும் இன்றும் அம்பலம்,சேர்வை பட்டத்தோடு பாதுகாத்து வருகின்றனர்.
மேலூர்,சிறுகுடி,வெள்ளலூர் நாட்டு கள்ளர்களும் இந்த சோழர்களின் பாகனூர் கூற்றம் மற்றும் நாட்டைமைப்பை அம்பல பட்டத்தோடு பாதுகாத்து வருகிறார்கள்.
பிறமலைகள்ளர்கள் இன்றும் நாட்டைமைப்பை தன்னரசாக கட்டமைத்து 8 நாடுகளை பாதுகாத்து வருகிறார்கள்.
மேலும் பிறமலைக்கள்ளர்கள் இன்றும் 8நாட்டுத்தேவர்கள் காதில் பெரிய வளையம் போல் உள்ள கம்பியை தொங்கவிடுகிறார்கள்.

புதுக்கோட்டையில் இன்றும் மிழலைக்கூற்றம் மற்றும் நாட்டு அமைப்பை பல சோழ மற்றும் பல்லவ படங்களோடு பாதுகாத்து வருகிறார்கள்.
மேற்கோள் காட்டிய விடயங்களின் மூலம் மானுடவியல் ரீதியாக சோழர்கள் என்பதை கள்ளர்கள் என்பதை எந்த மானுடவியல் ஆய்வாளார்களாலும் மறுக்க முடியாத நெற்றிபொட்டில் ஆதாரங்களுடன் உள்ளது.
குறிப்பு: எனது தாயை மற்றவர்கள் தாயாக ஏற்றுக்கொள்வது என் தாய்க்கு பெருமையே, ஆனால் எனது தந்தையை மற்றவர்கள் உரிமை கோருவது அவர்களின் தாயை பழிப்பதற்கு சமம், இங்கு எனது தாய்=தமிழ் தந்தை=சோழர்......!
நன்றி
Madras Presidency gazetteers by Frederick S.Mullaly
East India Magazine by Mr.Alexandar 
South Indian caste and tribes by Mr.Edgar Thurston

அன்புடன்
சோழ பாண்டியன்
ஏழுகோட்டை நாடு

விஜய நகர பேரரசின் எழுச்சியும் கள்ளர் படைபற்றின் வீழ்ச்சியும்



19ஆம் நூற்றாண்டின் மதுரை புறநகர் வேளாண்மை பிரச்சனையை சமாளிக்க பேரன்புக்கும்,பெருமதிப்பிற்கும் உரிய அய்யா பென்னி குக் லோகன் அவர்கள் முல்லை பெரியாறு அணையை வெற்றிகரமாக கட்டினார்.
அந்த அந்த முல்லை பெரியாறு திட்டத்தை பொருளாதார ரீதியாக அங்குள்ள மக்களுக்கு எப்படி பயன்படும் என ஆய்வு மேற்கொண்டார் பிரிட்டீஸ் பொருளாதார ஆய்வாளர் திரு.கில்பர்ட் ஸ்லேடர்.
அப்படி அவர் ஆய்வு மேற்கொள்ளும் போது மதுரையை பூர்வீகமாக கொண்ட கள்ளர் பழங்குடியினரின் பழக்கவழக்கங்களை பார்த்து வியந்தார்.
அப்படி அவர் வியக்க காரணம் இந்தியாவில் களவில் ஈடுபடும் எந்த மக்களையும் சமூகத்தில் இருந்து விலக்கி வைப்பது தான் வழக்கம்.





ஆனால் மதுரையில் கள்ளர் பழங்குடிகள் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்துடன் இருப்பது தான் அவர் வியக்க காரணம்.
இந்த முரண்பட்ட விசயத்திற்காக அவர் ஆய்வு மேற்கொண்ட போது இந்த கள்ளர் பழங்குடி மக்கள் இவ்வாறு களவில் மட்டும் நிற்க காரணம்,
விஜய நகர பேரரசு, பாண்டிய மன்னர்களை தோற்கடித்து பாண்டிய மன்னரின் கள்ளர் பற்றை கலைத்ததனால் தான் கள்ளர் பழங்குடிகள் வாழ்வாதாரத்திற்காக களவில் மட்டுமே நிற்கிறார்கள் என்கிறார்.
அவரது கூற்றுக்கு ஏற்றார்போல்,
பாரதமே போற்றிய பாண்டிய பேரரசு தங்களுக்குள் ஏற்பட்ட அரியணை உட்பூசலால் 14ஆம் நூற்றாண்டில் மதுரையை இழந்து திருவாடனை,கயத்தார்,தென்காசிக்கு தப்பி சென்று சிறு,சிறு பகுதிகளில் ஆட்சி செய்து வந்தனர்.

ஆனால் பாண்டியர்கள் வீழ்ந்தாலும், அந்த பாண்டிய பேரரசுக்கு கிழக்கு எல்லை காவலனாக இருந்த காரைக்குடி,தேவகோட்டை,திருப்பத்தூர், புதுக்கோட்டை கள்ளர்களும் அவர்களின் அரையர்களும் தன்னிச்சையாக மதுரை சுல்தானை எதிர்த்து போராடி தோல்வியை தழுவுகிறார்கள் (பார்க்க: சூரைக்குடி கள்ளர் பற்று) மேலும் இதே காலக்கட்டத்தில் கள்ளர் குல அரையர்கள் தங்களுக்குள்ளே போட்டி,பொறாமையின் காரணமாக பல உயிர் பலிகளையும் ஏற்படுத்தி வருகின்றன.

உதாரணம்: கிபி1411ல் இரு அரையர்கள் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தமும்,உயிர் பலியும்.


அதே காலக்கட்டத்தில் ஏற்பட்ட வலிமையான நாயக்கர் ஆட்சியும்,பாண்டியர்களின் வீழ்ச்சியும் கள்ளர்களின் வாழ்வாதாரத்தையும்,நிலம்,பாடிக்காவல் உரிமையும் இழக்கப்படுகிறது.
உதாரணம்: கிபி:1436,1450,1451 நரசிங்க நாயக்கர் காலத்தில் நாட்டை இழந்து ஊரைவிட்டு வெளியேரும் கள்ளர்கள்.


மற்றும் திருமலை நாயக்கருக்கும்,தனிக்காட்டு தன்னரசு கள்ளர் நாட்டுக்கும் நடந்த யுத்தம் வைகையில் இரத்த வெள்ளம் ஓடிய இரத்த சரித்திரமும் உண்டு.
பாண்டியர்களின் வீழ்ச்சி,சுல்தான்களிடம் ஏற்பட்ட போர் தோல்வி,நாயக்கரிடம் நிலம்,ஊர் படைப்பற்று இழத்தல் என வாழ்வாதாரத்தை இழந்த கள்ளர்கள் சூரையாடல்,வழிப்பறி,கலகங்கள் செய்தல் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

#குறிப்பு: “ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை”

நன்றி
Southern India by Mr.Gilbert Slater, D.Sc.(1936)
South Indian and Her Muhammadan by Mr.Krishnaswami Aiyangar, M.A.,(1921)
The Proceeding of the Indian History congress seventh session by Mr.Tara Chand(1944)

அன்புடன்
சோழ பாண்டியன்
ஏழுகோட்டை நாடு

நாயக்கர்களுக்கு எதிரான தன்னரசு கள்ளர் நாட்டு போர்



சமீப காலமாக முக்குலத்தோருக்கும்,நாயக்கர் சமூகத்திற்கும் நடந்த ஊர் சண்டையை வைத்து ஏதோ காலம் காலமாக முக்குலத்தோர்கள் நாயக்கர்களுக்கு நண்பர்கள் போலவும்,நாயக்கர்களின் பணியாள் போலவும் இருந்ததாக தமிழ் தேசியவாதிகள் போர்வையில் ஒழிந்து கொண்டு பிதற்றி வருகிறார்கள்.







அவர்களுடைய வாதமும் இனிமேலும் நாயக்கர்களுக்கு அடங்கி போகாதீர்கள் என்று தமிழ் இனப்பற்றுவாதிகள் போல புலம்புகிறார்கள், அவர்களுக்காகவே இந்த பதிவை சமர்பிக்கிறேன்.
மதுரையில் திருமலை நாயக்கர் மன்னர் ஆட்சி செய்த வருடத்தில் கிபி1623 முதல் 1659 வரை அவருக்கு மதுரையில் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தது மதுரை தன்னரசு கள்ளர்களே!
நாயக்கர்கள் ஆட்சிக்கு கட்டுப்படாத தன்னரசு கள்ளர் நாட்டு தலைவர்கள் திருமலை நாயக்கருக்கு எதிராக இறுதிவரை கலகத்தில் ஈடுபட்டனர்
தனிக்காட்டு தன்னரசு கள்ளர் படைப்பற்றை, தென் தமிழகத்தை முழுவதும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த திருமலை நாயக்கரால் வெல்ல முடியாமல் திருச்சி சொக்கலிங்க நாயக்கரிடம் உதவி கேட்கிறார்.
சொக்கலிங்க நாயக்ககரோ மிகவும் மிகுந்த தடுமாற்றத்துடன் தனது தளபதியான வீரையன் சேர்வையை(மதுரை வீரன்) பீரங்கி,குதிரைப்படை,யானைப்படை உள்ளிட்ட படைகளுடன் மதுரைக்கு அனுப்பி வைக்கிறார்.
இதனை உரையாடல் வடிவிலே தருகிறேன்.
சொக்கலிங்க நாயக்கர்: 
மதுரைக்கு போய் வன்மையுடன் தன்னரசு கள்ளரைத்தான் மதம் மடக்கி வாரும் தளபதியே

வீரையன் சேர்வை: 
15 நாளிலே பாங்கான தன்னரசு கள்ளர்களை வெட்டி கருவறுத்து விருது பெற்று வருகிறேன் மன்னா!

சொக்கலிங்க நாயக்கர்:
அது சுலபம் அல்ல “தனிக்காட்டுத் தன்னரசு கள்ளர் நாட்டை கருவறுக்க ஒரு வேந்தரால் முடியாது” தளபதி!

வீரையன் சேர்வை:
இதை கவனம் கொண்டு தன்னரசு கள்ளர் நாட்டை கருவறுத்து வருகிறேன் மன்னா!

இப்படியாக சொக்கலிங்க நாயக்க மன்னரிடம் உத்தரவு பெற்று தனது பெரும்படையுடன் மதுரை எல்லைக்கு வந்தடைகிறார் வீரையன் சேர்வை....!
வீரையன் சேர்வையின் படையை வந்ததை அறிந்த திருமலை நாயக்கர் தனது சிம்மாசனத்தில் இருந்து துள்ளி குதித்தெழுந்து தன்னரசு கள்ளர் பற்று அழியப்போவதை என்னி ஆனந்த கண்னீருடன் பார்க்கிறார்.
திருமலை நாயக்கர் வீரையன் சேர்வையை வரவேற்று சில பரிசுகளையும் கொடுத்து 10நாட்டு தன்னரசு கள்ளர் நாட்டை கருவறுக்க கோருகிறார்.
இதன் பின்பு திருமலை நாயக்கர் படையும்,வீரையன் சேர்வையின் படையும் இனைந்து போருக்கு தயாராகின்றனர்.
இதனை அறிந்த 10நாட்டு தன்னரசு கள்ளர் நாட்டை சேர்ந்த கள்ளர் தலைவர்கள் நாட்டுக்கூட்டம் கூட்டி போருக்கு தயாராகிறார்கள்.
மதுரை நகரத்தின் மத்திய பகுதியில் 10நாட்டு தன்னரசு கள்ளர் படைப்பற்று தங்களுடைய பூர்வீக ஆயுதங்களாக வளரி,வாள்,வேல் போன்ற ஆயுதங்களுடன் நாயக்கர் கூட்டுப்படையை பேய் தாக்குதலால் உருக்குலைய வைக்கின்றனர்.
இதனை அறிந்த வீரையன் சேர்வை களத்தில் நேரடியாக இறங்கி போர் புரிகிறார். கன்னில் பட்ட அனைத்து கள்ளர்களையும் சிறைபிடிக்காமல் முழுவதுமாக வெட்டிக்கொலிக்கிறார்.
இருபுறமும் இழப்புகள் ஏராளமாக நடைபெற்றது, தன்னரசு கள்ளர் பற்று தனது படைகளுடன் மதுரை புறமலை நாட்டிற்கு பின் வாங்குகிறது.
இதனை சற்றும் எதிர்பார்க்காத திருமலை நாயக்கர் ஆனந்த மிகுதியில் பொன்,வைரங்களால் வீரையன் சேர்வையை அலங்கரிக்கிறார்.
இருந்தாலும் திருமலை நாயக்கரால் தன்னரசு கள்ளர் நாட்டு பற்றை முழுமையாக ஒழிக்க முடியவில்லை...!
இதனால் திருமலை நாயக்கர் தன்னரசு கள்ளர் நாட்டை தனக்கு கட்டுப்பட்ட பாளையமாக மாற்ற ஒரு யுக்த்தியை கையாளுகிறார்.
அது தான் தன்னரசு கள்ளர் நாட்டு வீரனான பின்னத்தேவரை அழைத்து அவருக்கு பொன் பொருட்களை பரிசளித்து திருமலை பின்னத்தேவர் என பட்டம் சூட்டி 10நாட்டுக்கும் தலைவராக அறிவித்தார்.
ஆனால் தன்னரசு கள்ளர் நாட்டு தலைவர்களோ பின்னத்தேவரை நாட்டை விட்டு விலக்கி வைக்கின்றார்கள்.
மேலும் இதன் விளைவால் பின்னத்தேவரால் 10நாட்டுக்குள் பெண் எடுக்க முடியாத சூழல் உருவாகி “விலக்கு கள்ளர்களிடம் இருந்து பெண் எடுத்துக்கொண்டார்.
இறுதிவரை தன்னரசு கள்ளர் நாட்டுக்குள் நுழையாமல் திருமலை நாயக்கருக்கு தளபதியாகவே திகழ்ந்தார்.
இந்த சமயத்தில் வீரையன் சேர்வை திருமலை நாயக்கர் கோட்டையில் தகாத நடவடிக்கையால் திருமலை நாயக்கரின் உத்தரவின் பேரில் திருமலை பின்னத்தேவர் வீரையன் சேர்வையை மாறு கை மாறு கால் வாங்குகிறார்.
மன்னர் திருமலை நாயக்கர் தனது வாழ் நாள் இறுதிவரை மேல் நாட்டு கள்ளர் நாட்டிலோ,கீழ் நாட்டு கள்ளர் நாட்டிலோ சல்லி பைசா கூட வரி வசூல் செய்ய முடியவில்லை.
நாயக்கர் காலம் தொட்டு ஆங்கிலேயர் காலம் வரை இந்த தன்னரசு கள்ளர் பற்று சுயமரியாதையோடு வாழ்ந்தனர் என்பதே வரலாறு.
இது போக திருமலை நாயக்கரால் சிறை பிடிக்கப்பட்ட கொன்றிமாயத்தேவர் மற்றும் கத்திக்காரனை. மாயக்காள்,ராக்கம்மாள் எனும் இரு கள்ளர்குல நாச்சியார்கள் கள்ளர் பற்றை திரட்டி நாயக்கர் கோட்டையை தகர்த்து நாயக்கர் படையை விரட்டி இருவரையும் மீட்டார்கள் என்பது தனி வரலாறு.
வரலாறு இப்படி இருக்க திருமலை நாயக்கர் தெப்பக்குளத்தை அடிமைகளை வைத்து உருவாக்கி, பின்பு அந்த அடிமைகளுக்கே முதல் மரியாதையும் கொடுக்கிறார்.
அந்த அடிமைகளும் இன்றுவரை நாயக்கர்கள் போட்ட பிச்சை மரியாதையை தெப்பத்திருவிழாவில் அனுபவத்தி வருகிறார்கள்.
இப்படி அவர்கள் வரலாறு இருக்க இன்று ஏதோ தமிழ் தேசியவாதிகள் என்ற போர்வையில் வடுகனை தமிழ் நாட்டை விரட்ட வேண்டும் என்று பிதற்றுகிறார்கள்.
மேலும் இதே திருமலை நாயக்கர் காலத்தில் சடைக்க தேவரின் மறப்படைக்கும் திருமலை நாயக்கரின் தளபதிக்கு பல போர்கள் நடந்தேறி சேதுகரையில் நாயக்க படைகளின் இரத்தம் கடலாக ஓடியது.....!
என்னுடைய கேள்வி என்னவென்றால் இந்த வரலாறு எல்லாம் தமிழ் தேசியவாதிகளுக்கு தெரியுமா அல்லது தெரிந்தும் புறக்கணிக்கிறார்களா...!
இது தெரியாமல் முக்குலத்து இளைஞர்களே வடுகன் ஒழிக என கோஷம் போடுகின்றனர்,
முக்குலத்து இளைஞர்களே நம்மிடம் என்றும் நாயக்க மக்கள் எதிர்க்க மாட்டார்கள், காரணம் அவர்களுக்கு வரலாறு நன்றாக தெரியும்.
நான் உங்களை நாயக்கர்கள் வாழ்க என்றும் சொல்ல வேண்டாம் வடுகன் ஒழிக என்றும் சொல்ல வேண்டாம்.
நம்முடைய இழந்த உரிமையான DNTக்கு குரல் கொடுங்கள், அது போதும் போலி தமிழ்தேசியவாதிகளின் வலையில் விழ வேண்டாம்.
குறிப்பு: வீரணன் சேர்வையும் கள்ளர் சமூகம் தாம் அவரை வளர்த்தது ஒர் அருந்ததியர் இனத்து பெண், இன்றும் மதுரை வீரனை திருச்சி மற்றும் புதுக்கோட்டை நாட்டு கள்ளர்கள் குல தெய்வமாக வழிபடுகிறார்கள். ஆக நமக்கு எதிரி நாமே😒
அன்புடன்
சோழ பாண்டியன்
ஏழுகோட்டை நாடு

நன்றி 
மதுரை வீரன் அம்பானை (சரஸ்வதி நூலகம்)

குறவர்களை அரவனைத்த கள்ளர் ஜமீன்

கண்டர் கோட்டை (அ) கந்தவர்கோட்டை







இராஜ இராஜ சோழ தேவர் காலத்தில் கண்டராத்திய சோழ கோட்டை என அழைக்கப்பட்டு பின்பு கண்டர் கோட்டை (அ) கந்தவர்கோட்டை என அழைக்கபடும் இந்த பகுதியை 1000 வருடங்களாக கள்ளர்குல அரையர்களான பண்டாரத்தார்களால் ஆளப்பட்ட நாடாகும்.
இன்றும் இந்த ஊர்களில் கள்ளர் பெருமக்கள் கண்டர்,கண்டர் கிள்ளி,கண்டர் சில்லி, கண்டராயர்,கண்டவராயர் என தங்களது சோழ முன்னோர்களின் பட்டத்தை மார்பில் தாங்கி வாழ்கின்றனர்.
சோழர்கள் காலத்தில் நாட்டமைப்பில் இருந்த இந்த கள்ளர் நாடு, நாயக்கர் காலத்தில் பாலையமாக சுருக்கப்பட்டது, பின்பு பிரிட்டீஸ் காலத்தில் ஜமீனாக மேலும் சுருங்கப்பெற்றது.
பிரிட்டீஸ் காலத்தில் 53கிராமங்களை உள்ளடக்கியதாக நம் கந்தவர்கோட்டை ஜமீன் இருந்தது.
பிரிட்டீஸ் இந்தியாவில் இந்த கந்தவர்கோட்டை ஜமீந்தார் முதன் முதலாக தமிழ்நாட்டில் ஜமீந்தாரரின் முகவர்களாக குறவர் இனமக்களை நியமித்தார். குறவர் மக்களை வேற எந்த ஜமீந்தார்களும் முகவர்களாக நியமித்ததில்லை.
ஒரு பழம்பெரும் தமிழ் குடியான குறவர் பழங்குடியினரை நாட்டுக்குள் ஒரு மரியாதைக்குரிய ஜமீந்தார் முகவர் பதிவியில் அமர வைத்து அழகு பார்த்தவர்கள் தான் கந்தவர்கோட்டை கள்ளர் குல ஜமீந்தார்கள்.
இவ்வளவு பாரம்பரியமிக்க இந்த கள்ளர் ஜமீன் இன்று சிதலமடைந்த அரண்மனையுடன் ஒரு சிறு ஊராக காட்சியளிப்பதை கண்டால் வேதனையாக உள்ளது.
மிகவும் வீரமிக்க இந்த நாட்டை சேர்ந்த கள்ளர்கள் குற்றப்பழங்குடி சட்டத்தால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதோடு அவர்கள் எந்த தமிழ் பழங்குடியை(குறவர்கள்) சமூகத்தில் ஒரு அந்தஸ்தை கொடுத்து அழகு பார்த்தார்களோ அவர்களும் குற்றப்பழங்குடி சட்டத்தில் கடுமையான இன்னல்களுக்கு ஆளானார்கள்.
இந்த குற்ற பழங்குடி சட்டத்தால் இன்று அந்த ஊரில் குறவர் மக்களின் குடியே இல்லாமல் உள்ளது மிகவும் வேதனையாகவும்,நெருடலாகவும் உள்ளது மக்களே!
கந்தவர்கோட்டை ஜமீன் கடந்த ஏழு தலைமுறையின் பெயர்கள்
1) சூர்யா நாராயண பண்டாரத்தார் 
2) அர்ஜுனனாதன் பண்டாரத்தார் 
3) ராஜா கோபால பண்டாரத்தார்
4) ராமச்சந்திர துரை பண்டாரத்தார்
5) ராமச்சந்திர துரை ராஜா பண்டாரத்தார்
6) துரை ராஜா பண்டாரத்தார்

இந்த கள்ளர்குல பண்டாரத்தார்கள் புதுக்கோட்டை தொண்டைமானுடன் நெடுங்காலமாக பெண் எடுத்துள்ளனர்.
குறிப்பு: குறவர் பழங்குடியினர்கள் இன்று
கள்ளர் பழங்குடியினருடன் இனைந்து 
DNTக்காக போராடி வருகின்றனர்.

*************வெல்லட்டும் DNT****************
நன்றி
MADRAS DISTRICT GAZETTEERS (TANJORE)
மராட்டிய ஆவணங்கள் தஞ்சை

தொண்மை ஆவணங்கள் உதவி - உயர்திரு இரமேஷ் மோகன்
கள ஆய்வு உதவி - உயர் திரு பரத் கூழாக்கியார்
அன்புடன்
சோழ பாண்டியன்
ஏழுகோட்டை நாடு

பழிக்கு பழி இரத்ததிற்கு இரத்தம்

பாகம் - 2










சென்ற பாகத்தில் நாம் கர்னல் ஹெரான் பிரிட்டீஸ் படைகள் கோவில்குடியில் கள்ளர் பழங்குடியினரின் சாமி சிலையை திருடி அந்த கோவிலை சூரையாடி கொள்ளையடித்ததை பார்த்தோம்
அந்த சம்பபத்திற்கு பிறகு பிரிட்டீஸ் படைகள் நெல்லைக்கு சென்றது அங்கு நமது நெல்லை வேங்கை பூலித்தேவரிடம் தூதுவனை அனுப்பி வரி கேட்டது.
ஆனால் நம் வேங்கை பூலித்தேவரோ வரிகொடுக்க மறுத்துவிட்டார், அதனால் கோபமுற்ற கர்னல் ஹெரானும்,கான் சாகிப்பும்(மருத நாயகம்) பூலித்தேவரின் வலிமையான கற்கோட்டையில் 3முறை பீரங்கியால் சுட்டு பயமுறுத்தி அவரால் எளிதில் கொடுக்கக்கூடிய பணமான ரூபாய்60000 மட்டும் கொடுத்தால் தாக்குதல் நடத்தமல் நாங்கள் நெல்லையை விட்டு வெளியேறுகிறோம் என்று கூறுகிறார்கள்.
ஆனால் பூலித்தேவரோ சல்லி பைசா கூட கொடுக்க முடியாது, உங்களால் முடிந்ததை செய்யுங்கள் என்று கூறுகிறார். மேலும் பிரிட்டீஸ் படைகள் முன்னதாக செஞ்சி,மணப்பாறை,மதுரையில் சண்டையிட்டு களைப்பாக இருந்தும் அவர்களுக்கு தேவையான உணவு பொருட்களும் குறைவாக இருந்ததை உணர்ந்த கர்னல் ஹெரான் மதுரைக்கு சென்று தேவையான உணவு பொருட்களை பெற்று ஓய்வும் எடுத்து கொண்டு பிறகு வந்து தாக்கலாம் என்று தனது படையை மீண்டும் மதுரைக்கு செல்ல முற்படுகிறார்.
மதுரைக்கு வந்த தனது படைகளுடன் வந்த ஹெரானுக்கு பிரிட்டீஸ் கவுன்சிலிடம் இருந்து அழைப்பு வருகிறது,
அதனால் ஒட்டு மொத்த பிரிட்டீஸ் படையும் திருச்சி நோக்கி செல்லத் தயாராகின்றன.

ஆனால் கிழம்புவதற்கு முன்பாக பிரிட்டீஸ் உளவுத்துறையிடம் இருந்து கர்னல் ஹெரானுக்கும் அவரது படைகளுக்கும் ஒரு அதிர்ச்சி தகவல் வந்தது.(இந்த உளவு தகவலில் காட்டு மிருங்களும்,கள்ளர் படை உலாவும் ஆபத்தான நத்தம் கணவாயை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தபடுகிறது)
அதாவது மதுரை பிரிட்டீஸ் கமாண்டர் தனது படைகளை நத்தம் கணவாயில் உள்ள மாடுகளை பிடித்து வருவதற்காக அணுப்புகிறார் ஆனால் அங்கு சென்ற அனைவரையும் கள்ளர் படைகள் ஊசிமுனை அளவு கூட ஈவு இரக்கமின்றி குத்தி சரித்துவிடுகிறார்கள்.
இதன் மூலமாக கர்னல் ஹெரானையும் அவரது படைகளையும் பழிக்கு பழியாக இரத்த ருசி காண்பதற்கும் இழந்த தங்களுடைய சாமி சிலையை மீட்பதற்கும் கள்ளர் படைகள் நத்தம் கணவாயில் தாயராக இருப்பதாக பிரிட்டீஸ் உளவுத் துறை தகவல் அளிக்கிறது.
இந்த அதிர்ச்சி தகவலால் கேட்டு இரத்தம் உறைந்து போன கர்னல் ஹெரான் மிகவும் நுணுக்கமாகவும்,தந்திரமாகவும் தனது படையை நான்கு பாகமாக பிரித்து ஒவ்வொரு பாகத்திற்கு ஒரு கேப்டன் தலைமை கொண்டு வழி நடத்த ஆணையிடுகிறார்.
கிபி1755 மார்ச் 28ஆம் நாள் மதுரையிலிருந்து வெளிச்சி நத்தம் பகுதிக்கு கர்னல் ஹெரானின் படை இரத்தம் உறைந்து மிகுந்த எச்சரிக்கையோடு வந்தடைகிறது.
முதலில் ஒரு சார்ஜண்ட் தலைமையில் 12 இரோப்பியர்களும் மற்றும் படைவீரர்களும் செல்கிறார்கள். அவர்களை தொடர்ந்து முதல் பிரிவு படை பீரங்கிகளுடன் செல்கிறது.
பின்பு இரண்டாவது படைப் பிரிவு கேப்டன் பொலிர் தலைமையில் செல்கிறது. கேப்டன் பொலிரை தொடர்ந்து மூண்றாவதாக ஒரு சார்ஜண்ட் தலைமையில் சில் பீரங்கிகளுடன் படைகள் செல்கிறது.
இறுதியாக நான்கவதாக கேப்டன் ஸ்மித் தலைமையில் யானைகள்,ஒட்டகங்கள்,பல சிறிய பீரங்கிகள், 6 ராட்சத பீரங்கிகள்(இந்த பீரங்கிகளில் தான் கள்ளர்கள் சாமி சிலை உள்ளது) 20இரோப்பியர்கள்,40 இங்கிலிஸ் படையில் இந்த பிரஞ்சு வீரர்கள்,200 சிப்பாய்களுடன் மிகுந்த கவனத்துடன் முன்னேறியது.
இத்தனை பேரையும் பலிகிடாவாக முன் அனுப்பி கர்னல் ஹெரான் இறுதியாக வருகிறார்.
முதலில் சென்ற இராணுவ பிரிவு தாங்கள் எந்த தாக்குதலுக்கும் ஆளாகவில்லை, இங்கு கள்ளர்களின் நடமாட்டம் இல்லை என தகவல் அளிக்கிறார்.
அனைத்தும் பாதுகாப்பாக செல்கிறது என அனைவரும் மகிழ்ச்சியோடு சென்று கொண்டிருந்தனர். ஆனால் இதை அனைத்தையும் வழித்தடத்தின் இருபுறத்திலும் கள்ளர்கள் தங்களுடைய உளவுபடை உளவாளிகள் மூலம் அத்தனை நிகழ்வையும் அவர்களுக்கே தெரியாமல் கண்காணித்து தகவல் கொடுத்து கொண்டிருந்தனர்.
இவ்வளவு பெரிய ஆங்கிலப்படைகளை தனிமை படுத்துவதற்காக கள்ளர்கள் வழித்தடத்தில் மரங்கள வெட்டி 30பேர் வரிசையாக செல்லும் வழியை 10பேர்களுக்கும் குறைவாக செல் அளவு பாதையை சுருக்குகிறார்கள்.
சரியாக கேப்டன் ஜோசப்பின் பீரங்கி படையுடன் வந்த சாமி சிலை பிரிவை கள்ளர்கள் வெட்டி வைத்த புதைகுழியில் பீரங்கி ஓட்டுனர் கவனமின்றி இறக்கிறார்.
இதனால் முன்னாடி சென்ற படைகளுக்கும் இவர்களுக்கும் உள்ள தொடர்பு துண்டிக்கப்படுகிறது, மேலும் என்ன தாமதம் எனக்கேட்க எந்த வீரர்களும் வரவில்லை(கள்ளர் படையால் கொல்லப்படுகின்றனர்)
மாஸ்டர் ஸ்டோக் போல் தங்களுக்கு ஏற்றால் போல் கள்ளர் படை ஆங்கிலேயப்படையை இயக்கியது, இதனால் பின்னால் வந்த அனைத்து படையும் ஒரே இடத்தில் தப்பித்து ஓட முடியாதவாறு தேங்குகிறது.
ஆங்கிலபடைகள் என்ன செய்வதன்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென கள்ளர் படைகள் தங்களுடைய ஆயுதங்களுடன்(வளரி,வில் அம்பு,18அடி ஈட்டி,நாட்டு துப்பாக்கிகள்) பயன்படுத்தி ஒருவிதமான வினோத சத்தம் எழுப்பி நான்கு பக்கமும் திரண்டு தாக்குதல் நடத்துகிறார்கள்.
கேப்டன் ஜோசப் படைகள் பீரங்கி மற்றும் நவீன ஆயுதங்களுடன் எதிர் தாக்குதல் நடத்துகிறார்கள்.
ஆனால் திடீரனெ கள்ளர் படைகள் அனைத்தும் காட்டுக்குள் மறைந்து விடுகிறது.
ஆங்கிலபடைகளால் அவர்களையோ,அவர்கள் சென்ற இடத்தையோ கண்டுபிடிக்க இயலவில்லை.
இந்த முதல் தாக்குதலில் கேப்டன் ஜோசப் மற்றும் ஆங்கிலப்படைகள் இரத்தம் உறையும் அளவிற்கு பயந்து நடுங்கி ஆயுதங்களுடன் நிற்கின்றனர்.
சற்று நேரத்தில் மீண்டும் நான்கு பக்கமும் கள்ளர் படை சூழ்ந்து மிகவும் உக்கிரமாக தாக்குதலை தொடர்ந்து பல பிரிட்டீஸ் வீரர்களை கொன்று குவித்து முன்னேருகின்றனர்.
தாக்குதலில் சாமி சிலையை வைத்திருந்த பெரிய பீரங்கியை சுற்றி இருந்த அனைவரையும் கள்ளர் படை தங்களது ஈட்டியால் குத்தி சரிக்கிறார்கள்.
திடீரென ஒரு குரல் வந்ததும் அனைத்து கள்ளர் படையும் தக்குதலை நிறுத்துகிறது.
அந்த குரல் என்னவென்றால் சாமி...!சாமி..! சாமி...! ஆம் கள்ளர்களின் சாமி சிலையை கள்ளர் படை மீட்கிறது.(இந்த தாக்குதலில் நேரில் பார்த்த கேப்டன் ஜோசப் தனது டைரியில் அந்த மகத்தான சம்பத்தில் அந்த கள்ளர்கள் அவர்களுடைய மனைவி,குழந்தைகளை மீட்டால் வரும் சந்தோஷத்தை விட அனைவரும் எல்லையற்ற மகிழ்ச்சியில் இருந்தார்கள் எனக்குறிக்கிறார்)
சாமி சிலையை மீட்ட பின்பும் நத்தம் டவுனுக்கு செல்லும் வரை கள்ளர் படை கேப்டன் ஜோசப்பின் படையை தாக்குதல் நடத்தி கொண்டே விரட்டுகிறது.
இந்த தாக்குதலில் நிலைகுலைந்த ஆங்கிலப்படைகள் அனைத்து இராணுவ தடவாளங்களையும் போட்டுவிட்டு பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடியது.
இறுதியாக கள்ளர் படை தாக்குதலில் எஞ்சியிருந்த சில வீரர்களுடன் கேப்டன் ஜோசப்பும்,கர்னல் ஹெரானும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு நத்தம் டவுனுக்கு வருகிறார்கள்.
இந்த சம்பவத்தை கேப்டன் ஸ்மித் நாங்கள் உயிர் பிழைத்து வந்தது ஆண்டவனின் மகிமை என்றும், கள்ளர்கள் மிகவும் ஆபத்தான வீரமிக்க பழங்குடியினர் என்றும் பிரிட்டீஸ் கவுன்சிலிடம் தெரிவிக்கிறார்.
இதனை நன்கு உள்வாங்கிய பிரிட்டீஸ் கவுன்சில் நத்தம் கணவாயை ஆபத்து பகுதியாக அறிவித்து அந்த வழியாக செல்லும் போது அனைத்து படைகளும் மிகவும் கவனமாக செல்ல வேண்டும் என அறிவிக்கிறது.
இந்த ஒட்டு மொத்த சம்பத்தை ஆராய்ந்த பிரிட்டிஸ் முன்னாள் ஆவணக் காப்பாளர் S.C ஹீல்,
கர்னல் ஹெரான் தேவையில்லாமல் கள்ளர் பழங்குடியை சீண்டி நண்றாக வாங்கி கொண்டார் எனவும்.

இந்த சம்பவத்தை அனைத்து பிரிட்டீஸ் ஆய்வாளர்களும் தங்களது புத்தகத்தில் ஆவணப்படுத்தியுள்ளனர்.
கர்னல் ஹெரான் இருந்த வரை பிரிட்டிஸ் படைகளும்,கள்ளர் படைகளும் மாறி மாறி இழப்பை சந்தித்தது.
இந்த கீரி,பாம்பு பகமை பெருங்காம நல்லூர் கள்ளர் தாக்குதல் வரை தொடர்ந்தது.
#குறிப்பு: தென்னிந்தியாவில் அனைத்து மன்னர் மட்டும் சிற்றரசர்களின் இரத்தம் பார்த்த ஆங்கிலேயர்கள் முதன் முதலாக அவர்களுடைய இரத்ததை பார்க்க வைத்தது கள்ளர் படை கையால் என்பது வரலாற்று உண்மை.
நன்றி
War of coromandel 
Military transactions of Hindustan 
The rebel commandant 
War of Asia 
British rules in India

அன்புடன்
சோழ பாண்டியன் 
ஏழுகோட்டை நாடு

பழிக்கு பழி இரத்ததிற்கு இரத்தம்


பாகம்-1





கிபி1755மார்ச் மாதம் மணப்பறையில் உள்ள கள்ளர் படைப்பற்றை வென்று மதுரையில் உள்ள நாவாபின் மதுரை பிரதிநிதியான மியானாவை பிடிப்பதற்காக கர்னல் ஹெரானும்,கான் சாகிப் என்கிற மருத நாயகமும் மதுரைக்கு வருகிறார்கள்.
இவர்களுடைய வருகையையொட்டி மியான அங்கிருந்து தப்பி மதுரையில் இருந்து 8கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோவில்குடி (திறம்பூர் என்பது அதனுடைய தொண்மையான் பெயர், மேலூருக்கும் மதுரைக்கும் நடுவில் ) என்கிற இடத்தில் ஒழிந்து கொள்கிறார்.
இதனால் கர்னல் ஹெரானும்,கான் சாகிப்பும் கோவில்குடியை நோக்கி செல்கிறார்கள். இதனை எதிர்பார்த்த மியானா மீண்டும் அங்கிருந்து தப்பி செல்கிறார்.
பின்பு மிகவும் தாமதமாக வந்த கர்னல் ஹெரான் கோவில்குடியில் உள்ள கள்ளர்கள் பூர்வீகமாக வணங்கக்கூடிய கோவிலை பார்த்து மியானாவை பிடிக்கும் சாக்கில் அந்த கோவிலை கொள்ளையடிக்க திட்டமிடுகிறார்.
கோவிலை சுற்றி காவலுக்கு இருந்த கள்ளர் பற்றுடன் சண்டையிட்டு அங்கிருந்த அனைத்து கள்ளர்களையும் கொன்றுவிட்டு பின்பு கொள்ளையடிக்க தயாராகிறார் கர்னல் ஹெரான்.
கான் சாகிப்புக்கு இதில் கொஞ்சம் கூட உடன்பாடில்லாமல் கோவிலில் ஏறுவதற்கு ஏணி மற்றும் உபகரணங்கள் இல்லை என்றும் மேலும் மியானா இங்கிருந்து தப்பி சென்றுவிட்டார் எனவும் கூறுகிறார்.
ஆனால் இதனை ஏற்காத கர்னல் ஹெரான் அந்த கோவிலின் கோட்டை கதவை வைக்கோல் போரை வைத்து தீயிட்டு எரிக்க ஆணயிடுகிறார்.
இதனை ஏற்று கான்சாகிப்பும் படைவீரர்களும் தீயிட்டு கதவை தகர்த்து உள்ளே நுழைந்து இஷ்டம் போல் அனைத்தையும் சூரையாடி கோவிலை தரைமட்டமாக்குகிறார்கள்.
மேலும் கள்ளர்கள் காலங்காலமாக வழிபடும் அவர்களது சாமி சிலையை பேத்து எடுக்கிறார்கள்.
இந்த காட்டுமிராண்டித்தனத்தை பிரிட்டீஸ் ஆய்வாளர்கள் இராபர்ட் ஓர்ம்,எஸ்.சி ஹிலும்,பிரிட்டீஸ் கவுன்சிலும் கடும் கண்டனமும்,வருத்ததையும் தெரிவிக்கிறார்கள். மேலும் கர்னல் ஹெரான் ஒட்டுமொத்த மிலிட்டரி விதிமுறைகளை மீறிவிட்டார் எனவும் குறிக்கிறார்கள்.
கொள்ளையடித்த கள்ளர்களின் சாமி சிலையை ஒரு பிரமாணரிடம் 5000 ரூபாய்க்கு கர்னல் ஹெரான் விற்க முனைகிறார் ஆனால் இதனால் ஏற்படும் பின்விளைவு அறிந்த அந்த பிராமணர் ஏற்க மறுக்கிறார் இதனால் அந்த சாமி சிலையை கொள்ளையடித்த பொருட்களோடு சேர்த்து கட்டுகிறார்கள்.
பின்பு அங்கிருந்து மாமறவர் காத்தப்ப பூலித்தேவரிடம் சண்டையிட நெல்லையை நோக்கி செல்கிறார்கள்
இந்த சம்பவத்தால் மிகவும் உக்கிரம் அடைந்த கள்ளர் பழங்குடியினர் கர்னல் ஹெரானையும் அவனது படையினரையும் 
எப்படி பழிதீர்த்தார்கள்....?
எப்படி தங்களுடைய சாமி சிலையை மீட்டார்கள்....?

என்பதை அடுத்த பாகத்தில் காண்போம்
நன்றி
War of coromandel 
The rebel commandant by S.C Hill

அன்புடன்
சோழ பாண்டியன்
ஏழுகோட்டை நாடு

இடையர் சமூகத்தை காத்த பின்னத்தேவர்



கிபி1645ல் திருநெல்வேலியில் உள்ள புதுப்பட்டியில் உள்ள பாளையக்காரர் ஒருவரால் 1000 இடையர் சமூக குடும்பங்களை பல இன்னல்களுக்கு உட்படுத்தி ஒடுக்கி வைத்திருந்துள்ளார்
இதனை அறிந்த திருமலை நாயக்கர் பிறமலைக்கள்ளர் சமூகத்தை சேர்ந்த பின்னத்தேவரை அழைத்து அந்த பாளையக்காரரை அடக்கி அந்த 1000 இடையர் குடும்பங்களை மீட்டு வரும் படி ஆனையிடுகிறார்.
இதனை ஏற்றுக்கொண்ட பின்னத்தேவர் மதுரையில் இருந்து தனது படைகளுடன் திரு நெல்வேலியை நோக்கி படையெடுக்கிறார்.
பின்னத்தேவர் திருநெல்வேலி புதுப்பட்டியை அடைந்தவுடன் அங்கு இருந்த பாளையக்காரருடன் போரிடுகிறார், போரில் அந்த பாளையக்காரை வெற்றியும் அடைகிறார்.


பின்பு அந்த பாளைக்காரரின் ஒடுக்குதலில் இருந்த 1000 இடையர் குடும்பங்களை மீட்டு அவர்களை பாதுகாப்பாக மதுரைக்கு அழைத்து வருகிறார் பின்னத்தேவர்.
பின்னத்தேவரின் இத்தகைய வீரத்தை பார்த்த திருமலை நாயக்கர் இடையர் சமூகத்தை மீட்டதால் மதுரையை சுற்றியுள்ள இடையர் சமூகத்தவர்களின் பாடிக்காவல் உரிமையை பின்னத்தேவருக்கும் அவர்தம் வாரிசுகளுக்கும் அளிக்கிறார்.
இதன் மூலமாக பின்னத்தேவர் மதுரை இடையர் சமூகத்தவரின் அன்புக்குரிய ஆஸ்தான காவல்காரராக ஆகிறார்.
பின்னத்தேவர் குடும்பத்தினரின் இந்த காவல் உரிமை பிற்காலத்தில் பிரிட்டீஸாரால் பறிக்கப்பட்டு பிரிட்டீஸார் அவர்களுடைய நேரடி நிர்வாகத்திற்கு அந்த இடையர் கிரமாங்களை கொண்டுவந்தனர்.
குறிப்பு: குற்றப்பரம்பரை சட்டம் பிறமலைக்
கள்ளர்கள் மீது புகுத்த முக்கிய காரணம் 
அவர்களது மதுரை சுற்றிய காவல் 
உரிமையை பறிப்பதற்கே.........!

நன்றி
A SOUTH INDIAN SUB CASTE BY 
DR.LOUIS DUMONT (French Anthropologist)

அன்புடன் 
சோழ பாண்டியன்
ஏழுகோட்டை நாடு

பிரிட்டீஸ் இந்தியாவில் முக்குலத்தோரின் பிரிவுகள்



கிபி1881 பிப்பரவரி 17ஆம் நாள் எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் தமிழ் நாட்டில் உள்ள இனங்களின் தொகுப்பை உட்பிரிவுடன் கணக்கெடுத்துள்ளனர் அதில் 

கள்ளர்களின் பிரிவு - 80
மறவர்களின் பிரிவு - 43
அகம்படியர்களின் பிரிவு - 20


இருந்துள்ளதை குறித்துள்ளார்கள் ஆனால் இன்று பல பிரிவுகள் நம்மிடமே கரைந்து விட்டது.

இருந்தாலும் நமக்குள் எத்தனை பிரிவுகள் அவற்றின் பின்புலம் என்னவென்று ஆராய இந்த கட்டுரை அனைத்து வரலாற்று ஆய்வாளர்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன், சில பிரிவுகளின் பெயர் அர்த்தம் புரிந்து கொள்ள மிகவும் கடினமாக உள்ளது. காரணம் ஆங்கிலேயர்களின் தமிழ் உச்சரிப்பும் அவர்கள் தமிழை ஆங்கிலத்தில் எழுதியது படிக்க சிரமமாக உள்ளது. இருந்தாலும் ஓரளவு எடுத்துவிட்டேன்.

இந்த கட்டுரையை வைத்து வரலாறை மீட்க நம் மக்களுக்கு உதவும் என நம்புகிறேன்.
கள்ளர்கள்
1. அம்பு நாட்டு கள்ளர்
2. அலர் நாட்டு கள்ளர்
3. அச்சரன கள்ளர்
4. அதலையூர் கள்ளர்
5. அம்பு இராஜா கள்ளர்
6. அஞ்சுவர் நாட்டு கள்ளர்
7. அப்பாடன் கள்ளர்
8. அய நாட்டு கள்ளர்
9. இடுவ கயல் கள்ளர்
10. இசக்கர் கள்ளர்
11. கரம்பை நாட்டு கள்ளர்
12. கரி நாட்டு கள்ளர்
13. பொய் மாத கள்ளர் 
14. காவல்கார கள்ளர்
15. கவி நாட்டு கள்ளர்
16. கீழ் சீமை கள்ளர்
17. கீழ் கட்டி கள்ளர்
18. கீழ் நாட்டு கள்ளர்
19. கீழ் கட்டு கள்ளர்
20. கீரைக்கார கள்ளர்
21. கொக்கால் கள்ளர்
22. கொரத்தி பாடி கள்ளர்
23. கூர்ளி கள்ளர்
24. குடிக் கள்ளர்
25. குடில நாட்டு கள்ளர்
26. குலமங்கல நாட்டு கள்ளர்
27. குலநாதன் கள்ளர்
28. மண்கொண்டான் கள்ளர்
29. மாசங்கு கள்ளர்
30. மாசரை கோட்டை கள்ளர்
31. மல்லாக் கோட்டை கள்ளர்
33. நாட்டுக் கள்ளர்
34. நாடிக் கள்ளர்
35. நாலு கூட்டர் கள்ளர்
36. நாலு கோட்டை கள்ளர்
37. பஞ்ச நாட்டு கள்ளர்
38. பாடிக்காவ்ய கள்ளர்
39. பாம்பன் கள்ளர்
40. பனம்பரை கள்ளர்
41. பறம்பு நாட்டு கள்ளர்
42. பார்கோட்டை கள்ளர்
43. பசங்கு நாட்டு கள்ளர்
44. பட்டமங்கள கள்ளர்
45. பிரவோச்சரி கள்ளர்
46. பிரமலை நாட்டு கள்ளர்
47. பிரமலை கள்ளர்
48. பிரம்பு நாட்டு கள்ளர்
49. பிரம்பா கள்ளர்
50. பெருமதி கள்ளர்
51. பிரமாத்து கள்ளர்
52. பெருமலை கள்ளர்
53. பாலாறு கள்ளர்
54. புறமாரிக் கள்ளர்
55. இராஜவர் கள்ளர்
56. சலங்கை கூட்ட கள்ளர்
57. சாருபள்ளி கள்ளர்
58. சாவடிசூத்திர கள்ளர்
59. சாவிர கள்ளர்
60. செம்பனேரி கள்ளர்
61. செங்கிலி நாட்டு கள்ளர்
62. செங்காட்டு கள்ளர்
63. செங்கு நாத கள்ளர்
64. சிங்கிரி கள்ளர்
65. சுன்னானுள்ள கள்ளர்
66. திசங்கு கள்ளர்
67. தென்னாட்டு கள்ளர்
68. தெற்கத்தி கள்ளர்
69. தெற்கு சீமை கள்ளர்
70. துவரிமான் கள்ளர்
71. உஞ்சனை கள்ளர்
72. வல்லவை கள்ளர்
73. வாம நாட்டு கள்ளர்
74. வாமத்து நாட்டு கள்ளர்
75. விவ கள்ளர்
76. மாயகோமதி கள்ளர்
77. மழவராய கள்ளர்
78. மேழதி கள்ளர்
79. மீசெங்கு நாட்டு கள்ளர்
80. மொரப்பனதி கள்ளர்

மறவர்கள்
1. அகத்தா மறவர்
2. அக்கண்டபாடி மறவர்
3. அம்பாரி மறவர்
4. அனிபுகட்டை மறவர்
5. இடச்சி மறவர்
6. கள்ளர்வழி மறவர்
7. கனயானி கிழனாம் மறவர்
8. கரக்குருக்கி மறவர்
9. கர்குறிச்சி மறவர்
10. கீர்ந்தலைக்கட்டி மறவர்
11. கோடாலிக்கார மறவர்
12. கோகதிரை மறவர்
13. கொக்கி மறவர்
14. கொத்தலி மறவர்
15. கொண்டையன் கோட்டை மறவர்
16. குத்திய மறவர்
17. மாவனந்தி மறவர்
18. பக்காத மறவர்
19. பாசுகத்தி மறவர்
20. பாத்திய மறவர்
21. பாலார் மறவர்
22. பிச்சகலை மறவர்
23. பிச்சக்கார மறவர்
24. சக்கரவர்த்தி மறவர்
25. சமுத்திரகார மறவர்
26 . செம்ப நாட்டு மறவர்
27. செம்பரி மறவர்
28. செம்மலி பொட்டு மறவர்
29. செங்காட்டை மறவர்
30. சோனாட்டு மறவர்
31. சோதியமதி மறவர்
32. குந்தர மறவர்
33. காவாள மறவர்
34. குளத்தூர் மறவர்
35. சுனிகாலகதை மறவர்
36. தரிக்கார மறவர்
37. தோரணை மறவர்
38. வந்தியல் கோட்டை மறவர்
39. வானாட்டு மறவர்
40, வன்னிக்கட்டி மறவர்
41. வன்னிகுத்தி மறவர்
42. வன்னிராத மறவர்
43. வெள்ளரி முத்தி மறவர்

அகம்படியர்
1. கொடபதி அகம்படியர்
2. கொடையூர் அகம்படியர்
3. கோட்டைபற்று அகம்படியர்
4. முதலி அகம்படியர்
5. நாசப்பு அகம்படியர்
6. பின்னார் அகம்படியர்
7. புலிக்கார அகம்படியர்
8. பொட்டுக்கட்டி அகம்படியர்
9. இராஜாவழி அகம்படியர்
10. இராஜசிய அகம்படியர்
11. இராஜவாசல் அகம்படியர்
12. இராக்கூர் அகம்படியர்
13. இராகஸ் அக்படியர்
14. இராணவர் அகம்படியர்
15. இராசப்பா அகம்படியர்
16. சரக்கடி அகம்படியர்
17. தோட்டக்கார அகம்படியர்
18. ஊழியர் வகுப்பு அகம்படியர்
19. வீரபோஜ அகம்படியர்
20. கீழ் நாட்டு அகம்படியர்

குறிப்பு: இந்த கணக்கெடுப்பில் சுருதிமான்,நத்தமான் உள்ளனர் ஆனால் இதில் மலையமான்களை குறிப்பிடவில்லை, பறம்பு நாட்டு கள்ளர்களே மலையமான்களாக இருந்திருப்பார்கள் என்பதே எனது கருத்து...!
மேலும் இந்த கணக்கெடுப்பில் கள்ளர்குல பட்டங்கள் தனியாக உள்ளது அதையும் சேர்த்தால் இன்னும் நீளும்.......!

நன்றி
Census of British India 1881
EYRE AND SPOTTISWOODE LONDON

அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு