மதுரை கொண்ட கொப்பரகேசரி பராந்த சோழன் காலத்தில் உறையூர் கூற்றத்திற்கு(திருச்சி மண்டலம்)உட்பட்ட புலிவலம் ஊரில் வாழ்ந்த அரங்கன் கள்வர் என்கிற பெருமகன் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குடுமியான் மலைக்கோவில் உள்ள விளக்கு அனையாமல் எரிப்பதற்கு 7 1/2 களஞ்சி துளைப்பொன் கொடையாக அளித்துள்ளார், இச்செய்தியை அந்த கோவிலில் உள்ள கல்வெட்டில் பதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பு:
துளைப்பொன் என்பது பண்டைக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட மாற்று உயர்ந்த பொன்னாகும். இப்பொன் மாற்று குறையாதது என அரசு அதிகாரியால் உறுதி செய்யப்பட்டதற்கு அடையாளமாகத் துளையிடப்பட்டதால் 'துளைப்பொன்' என அழைக்கப்பட்டது.
அந்த கொடையளித்த கள்வர் பெருமகனின் பெயராக அரங்கன் என்ற திருமாலைத் தாங்குகிறார். இன்றும் புதுக்கோட்டை கள்ளர்களுக்கு வைனவத்தாக்கம் உள்ளது.(தொண்டைமான் உட்பட)
முக்குல இளைஞர்கள் தங்கள் ஆற்றலை அஜித்,விஜய் என மண்ணிற்கு சம்மந்தம் இல்லாதவர்களை தூக்கி கொடிபிடிக்கிறார்கள், ஆனால் அவர்தம் வரலாறு ஒட்டு மொத்த தமிழர் வரலாற்றில் பாதி பகுதியை ஆக்கிரமித்துள்ளதை அவர்கள் அறிய மறுப்பது வேதனையாக உள்ளது.
குல முன்னோர்களை போற்றுங்கள்.
நன்றி
இந்திய தொல்லியல் துறை
அன்புடன்
சோழ பாண்டியன்
ஏழு கோட்டை நாடு
