Thursday, October 18, 2018

பாண்டியப் பேரரசு வீழ்ச்சியால் நாட்டை இழந்த கள்ளர் பெருமக்கள்






பாரதமே போற்றிய பாண்டிய பேரரசு தங்களுக்குள் ஏற்பட்ட அரியணை உட்பூசலால் 14ஆம் நூற்றாண்டில் மதுரையை இழந்து திருவாடனை,கயத்தார்,தென்காசிக்கு தப்பி சென்று சிறு,சிறு பகுதிகளில் ஆட்சி செய்து வந்தனர்.

ஆனால் பாண்டியர்கள் வீழ்ந்தாலும், அந்த பாண்டிய பேரரசுக்கு கிழக்கு எல்லை காவலனாக இருந்த காரைக்குடி,தேவகோட்டை,திருப்பத்தூர்,புதுக்கோட்டை கள்ளர்களும் அவர்களின் அரையர்களும் தன்னிச்சையாக மதுரை சுல்தானை எதிர்த்து போராடி தோல்வியை தழுவுகிறார்கள் (பார்க்க: சூரைக்குடி கள்ளர் பற்று)

மேலும் இதே காலக்கட்டத்தில் கள்ளர் குல அரையர்கள் தங்களுக்குள்ளே போட்டி,பொறாமையின் காரணமாக பல உயிர் பலிகளையும் ஏற்படுத்தி வருகின்றன.

உதாரணம்: கிபி1411ல் இரு அரையர்கள் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தமும்,உயிர் பலியும்.


அதே காலக்கட்டத்தில் ஏற்பட்ட வலிமையான நாயக்கர் ஆட்சியும்,பாண்டியர்களின் வீழ்ச்சியும் கள்ளர்களின் வாழ்வாதாரத்தையும்,நிலம்,பாடிக்காவல் உரிமையும் இழக்கப்படுகிறது.

உதாரணம்: கிபி:1436,1450,1451 நரசிங்க நாயக்கர் காலத்தில் நாட்டை இழந்து ஊரைவிட்டு😓வெளியேரும் கள்ளர்கள்.


பாண்டியர்களின் வீழ்ச்சி,சுல்தான்களிடம் ஏற்பட்ட போர் தோல்வி,நாயக்கரிடம் நிலம்,ஊர் படைப்பற்று இழத்தல் என வாழ்வாதாரத்தை இழந்த கள்ளர்கள் சூரையாடல்,வழிப்பறி,கலகங்கள் செய்தல் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

அவ்வாறு கள்ளர் பெருமக்கள் அந்த நிலைக்கு தள்ளப்பட முழுக்காரணமாக திகழ்வது பாண்டியர்களின் வீழ்ச்சியே என அலகாபாத் வரலாற்று ஆய்வாளர், வரலாற்று ஆதாரத் தொடர்ச்சியை வைத்து அவரின் புத்தகத்தில் மேற்கோள் காட்டியுள்ளார்.

மேலும் அந்த புத்தகம் 18பேர் கொண்ட அறிஞர் பெருமக்களால் தொகுக்கபட்டது. இந்த புத்தகம் அலகாபாத் பல்கலைகழகத்தில் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்த போது தட்டி எழுப்பி உங்கள் பார்வைக்கு சமர்பிக்கிறேன்.

நாட்டை காவல் காத்த கள்ளர் பெருமக்களை கொஞ்சம் கூட வரலாற்று புரிதல் இல்லாமல் சில மனசாட்சி அற்ற மூடர் கூட்டங்கள் “களவாணி” என வாய்க்கூசாமல் பிதற்றிக்கொண்டு திரிகிறார்கள்.

இந்த புத்தகங்களை படிக்கும் போது என்னுடைய மூளை ஏன் நம் முன்னோர்கள் மற்றவர்கள் போல் மிச்சர் சாப்பிட்டுக் கொண்டில்லாமல் உரிமைக்காக உயிர் துறந்தார்கள் என்று எண்ண வைக்கும் ஆனால் என்னுடைய ஆழ் மனதில் இருந்து ஒரு குரல் வந்து அது “நம் கடமை டா கொச்சைப்படுத்தாதே” என்று முற்றுபுள்ளி வைத்துவிடும்.

நன்றி
The Proceeding of the Indian History congress seventh session by Mr.Tara Chand (1944)
நிழற்பட உதவி: மாயக்கருப்பன் மதுரை

அன்புடன்
சோழ பாண்டியன்
ஏழுகோட்டை நாடு