Thursday, October 18, 2018

முனையத்திரியர் எனும் அரச மரபினர்


இன்றைய நவ நாகரீக காலகட்டத்தில் தான் யார்?எந்த வகையறா?எந்த குலம்?என்ன கலாச்சாரம்?

என்று இன்றுள்ள தலைமுறையினர் தேடமாட்டார்கள் என்று தெரிந்து தான் பண்டைய காலத்தில் யார் யார் எப்படி வாழ்ந்தார்கள் அவர்தம் புகழ் என்னவென்று கல்வெட்டில் பொறித்து விட்டு சென்று விட்டார்கள் நம் முன்னோர்கள்......!


அப்படி அவர்கள் விட்டுச் சென்ற ஒரு பெயர் தான் “முனையதிரியர்”

யார் இந்த முனையதிரியர் அவர்தம் பூர்வீகம் என்ன? தொழில் என்ன? யாருடைய வழித்தோன்றல்?









தென்னிந்திய கல்வெட்டுக்களை ஆராயும் போது கல்வெட்டு எண்: 692(A.R 378 of 1903)ல்


உறையூர் கூற்றம் எனப்படும் திருச்சி மண்டலத்தில் உள்ள நாடுகளில் நகரத்தார் எனும் நாட்டுக் கோட்டை செட்டியார் பெருமக்கள் நிலங்கள் வாங்கள்,விற்றல்,கொடையளித்தல் காணப்படுகிறது. இந்த நிருவாகத்தை ஒருவர் தலைமையின் கீழ் செயல்படுகிறது.

அவர் பெயர் தான் “மும்முடிச்சோழன் இளங்கோவேள் ஆன முனையராதித்தர்”

மும்முடிச்சோழன் என்பது ராஜ ராஜ சோழரின் பட்டப்பெயர்..!

இளங்கோவேள் என்பது இருக்குவேளிரின் அரசர் பெயர்....!


ER.140/1928 கொடும்பாளூர் இருக்குவேளிர்கள் கள்ளர்களே என எழுதியுள்ள கே.ஏ.நீலகண்ட சாஸ்திரிகள் எழுதிய சோழர்கள் புத்தகம் 1 பக்கங்கள் 184, 146, 224, 225, திருத்தொண்டர் புராணம்(பெரியபுராணம் பக்கம் 491) & திருத்தொண்டர் திருவந்தாதி). இந்நிலையில் இராசராச சோழன் பிறந்தது கள்ளர் குலமே என்ற வரலாற்றுச்செய்தியை யாரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.

ஆக ராஜ ராஜ சோழர் இருங்கோவளான முனையாத்திரியர் எனக் கூறுகிறது.
இதன் மூலம் முனையத்திரியர் எனும் பட்டம் கொண்ட கள்ளர் பெருமக்கள் ராஜ ராஜ சோழர் எனும் பெரிய தேவரின் வழித்தோன்றலே.


கல்வெட்டு :2
எண்: A.R No.132 of 1947ல்

இராஜேந்திர சோழ முனையாதித்தர் என இங்கு இராஜேந்திர சோழருடைய சிற்றசராகவும்,தளபதியாகவும் காட்டுகிறது.
மேலும் முனையாதித்தர் கோவிலுக்கு துளைபொன்களை காணிக்கையாகவும் அளிக்கிறார்.


கல்வெட்டு 
எண்: A.R. No.122 of 1938 to 1939

கங்கொண்ட சோழ முனையாத்திரர் எனக் குறிக்கிறது.

கங்கை கொண்ட சோழன் என்பது இராஜேந்திர சோழரின் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கல்வெட்டிலும் இராஜேந்திர சோழரின் சிற்றசராகவும்,தளபதியாகவும் முனையாதித்தரை காட்டுகிறது.


எவ்வோளோ பெரிய பாரம்பரியமிக்க இந்த பெயரை கள்ளர் இன்றும் தங்களுடைய முன்னோரின் பெயரை பட்டமாக தாங்கி வருகிறார்கள்.ஆனால் அந்த முனையத்திரர் பட்டம் தாங்கிய கள்ளர்களுக்கு இந்த வரலாறு தெரிந்து இருக்குமா என்றால் வருத்தம் மட்டும் தான் மிச்சம்.........!

இந்த முனையத்திரர் பட்டம் தாங்கிய கள்ளர்கள் மன்னார் குடியில் இன்றும் பல கோவில்களில் முதல் மரியாதையுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

அதைவிட முக்கியமான செய்தி

“மத்திய அரசால் என்ன செய்ய முடியும்,என்ன 10 வருடம் சிறையில் அடைப்பார்களா? பின்பு வெளிவந்த பிறகு உங்கள் கூட்டத்தை வேரோடு பிடிங்கி எரிவேன்” என ஒரு குரல் இந்திய அரசுக்கு ஒரு சிம்மசொப்பனமாக இருந்து கர்ஜித்து வருகிறது. ஆம் அந்த குரலின் சொந்த்க்காரர் ஆன உயர்திரு டிடிவி தினகரனார் ஒரு முனையத்திரியர் வழிவந்தவரே.....!

அப்படி அவர் பேசக் காரணம் அவர்தம் முன்னோரின் மரபு கடத்தலால் வந்த குணமே.....!


டிடிவி முனையத்திரியர்

நன்றி 

தொல்லியல் துறை மற்றும்
விக்னேஷ் மாளுசுத்தியார்
பரத் கூழாக்கியார்

அன்புடன் 
சோழ பாண்டியன்
ஏழுகோட்டை நாடு