வேங்கை சின்ன மருதுவால் ஆங்கிலேயருக்கு எதிராக முன்னொடுக்கப்பட்ட தென்னிந்திய புரட்ச்சியில் பல மன்னர்கள்,பாளையக்காரர்கள்,நாட்டு அம்பலங்கள்,ஊர்த் தலைவர்கள் என பலரும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு தங்கள் நாட்டுக்காக தங்கள் உயிரை தியாகம் செய்தனர்.
இந்த தென்னிந்திய புரட்சியில் தமிழ் நாட்டில் எப்படி கள்ளர்,மறவர் பெருமக்கள் தங்களுடைய வீரத்தையும்,உயிரையும் தங்கள் நாட்டுக்காக அர்ப்பணித்தார்களோ.....!
அதே போல் கொங்கு நாட்டில் வாழும் கொங்கு வெள்ளாள கவுண்டர் பெருமக்கள் தங்களின் வீரத்தையும்,உயிரையும் நாட்டுக்காக அர்ப்பணித்துள்ளனர்......!
அதாவது இந்த ஆங்கிலேயருக்கு எதிரான தென்னிந்திய புரட்சியில் தன்னரசு கள்ளர் நாட்டுக் கள்ளர் பெருமக்கள் தமிழ் நாட்டின் புரட்சி அமைப்பு கூட்டணிக்கு மையமாக செயல்பட்டார்கள்.
அதேபோல் கொங்கு வெள்ளாள கவுண்டர் பெருமக்கள் கொங்கு நாடு மற்றும் மலபார் தேச புரட்சி கூட்டணிக்கு மையப் புள்ளியாக செயல் பட்டுள்ளனர்.
இங்கு எப்படி போற்றுதலுக்குரிய மருதுபாண்டியர்கள்,தன்னரசு கள்ளர் நாட்டு தலைவர்கள்,மயிலப்பன் சேர்வை,தென்கொண்டான் தேர்போகி நாடு,சிங்கம் செட்டி,முத்துக் கருப்பத் தேவர்,கள்ளப்பட்டி பொன்னித் தேவர் மற்றும் இஸ்லாம் மக்கள் என பல பெருமக்கள் போர் புரிந்தார்களோ.....!
அதே போல் கொங்கு நாடு மற்றும் மலபார் தேசங்களில் சின்னன் கவுண்டர்,அப்பச்சி கவுண்டர்,வெள்ள கவுண்டர்,வர்ணவர்சி கவுண்டர் என ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர் செய்துள்ளனர். இந்த கவுண்டர் தலைவர்கள் எப்படி போர் செய்துள்ளனர் என்பதை அடுத்த பதிவில் விரிவாக பதிவிடுகிறேன்.
குறிப்பு: தீரன் சின்னமலை கவுண்டர் ஒரு கற்பனை
கதாபாத்திரம் எனச் சொல்லும்
மூடர்களுக்கு அடுத்த பதிவு சம்மட்டி
பதிவாக அமையும்.
நன்றி
The First War Of Independence
அன்புடன்
சோழ பாண்டியன்




