Thursday, October 18, 2018

தென்னகத்தின் போர் பழங்குடியினர்


கிபி1787ல் ஆங்கிலேயர்கள் தமிழ்நாட்டில் எத்தனை பேர் போர் செய்ய தாயராக இருந்தார்கள், அவர்கள் எந்த நாடு,என்ன குலம் என்பதை புத்தகமாக வெளியிட்டுள்ளார்கள்.

அதாவது கள்ளர் நாடுகளில் (தொண்டமான்,நத்தம்,மதுரை, மேலூர்) 30 முதல் 40000 கள்ளர்கள் ஆயுதங்களுடன்(சிவகங்கை கள்ளர்களை சேர்க்காமல்) பல கள்ளர் தலைவர்களின் கீழ் இருந்துள்ளார்கள் என்று குறிக்கிறார்கள்.


1891சென்செக்ஸ் ஆப் இந்தியாவில் கள்ளர்களின் மொத்த எண்ணிக்கையே 4,10,983 தான், அந்த கணக்கெடுப்புக்கு 104வருடங்களுக்கு முன்பு கள்ளர்களின் எண்ணிக்கை 3லட்சங்கள் கூட இருக்காது.

மேலும் அதில் பெண்கள்,குழந்தைகள்,முதியவர்கள் என பிரித்தால் 1லட்சம் கூட இருக்காது, ஆக அனைத்து கள்ளர் ஆண்மகன்கள் போர் தொழில் மட்டுமே செய்துவந்துள்ளனர் என்பதே இதில் சிறப்பு வாய்ந்தது.

எவ்வளவு போர் பாரம்பரியம் மிக்க போரை மட்டுமே தொழிலாக வைத்துள்ளார்கள் இந்த கள்ளர் பெருமக்கள்......!

அதே போல் மறவர் சீமையிலும் இதே போல் 12000 வீரர்கள் ஆயுதங்களுடன் இருந்துள்ளார்கள். அப்போது மறவர் பெருமக்கள் 1.5பேர் கூட இருந்திருக்க மாட்டார்கள்.




அதில் பெண்கள்,குழந்தைகள்,முதியவர்கள் என நீக்கினால் 50000 பேர் கூட வரமாட்டார்கள்.


ஆக மறவர் மக்களும் போரை மட்டுமே தொழிலாக கொண்டிருந்திருக்கிறார்கள்.

இது போக ஆங்கிலேயருக்கு எதிராக இந்த மக்கள் செய்த உயிர் தியாகம் ஒரு யுகம் சொல்லி மாளாது, அதனால் தான் என்னவோ கள்ளர்,மறவர்,அகம்படியர்களை ஆங்கிலேயர்கள் #MILITARY #TRIBE என்று கூறி பிற்காலத்தில் குற்ற பழங்குடியினராக ஒடுக்கப்படுகிறார்கள்.

குறிப்பு: வரலாறு தெரியாத இனம் விரைவில் 
அடிமையாகும்


நன்றி
ENGLISH INTEREST IN INDIA 1767 by WILLIAM (Member of parliament) and late commander of southern army on the coast of coromandel

அன்புடன்
சோழ பாண்டியன்
ஏழுகோட்டை நாடு