Thursday, October 18, 2018

உலக தொன்மை பழங்குடியினர் பட்டியலில்


கள்ளர்,மறவர்






பிரான்சிஸ் ஹக்ஸ்லி என்ற இங்கிலாந்து மானிடவியலாளர் உலகம் முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டு 321 பழங்குடியினர்களின் வாழ்வியல்களை பற்றி தனது குறிப்பில் எழுதியுள்ளார் அதை கிபி1964ல் மேரி சிம்ஸ் மற்றும் மேரி கேமிட்ஜ் புத்தகமாக தொகுத்துள்ளனர்.

ஒரு பழங்குடியினர் அந்தஸ்தை பெற வேண்டும் என்றால் தங்களுக்கென்று தனி கலாச்சாரம்,பண்பாடு,வழிபாடு என மற்றவர்களிடம் இருந்து வேறுபட வேண்டும். மேலும் அதே கலாச்சாரம் உலகில் இன்னொரு பழங்குடி மரபோடு தொடர்புபட வேண்டும்.

அப்படி அந்த மானிடவியலாளர் வட இந்தியாவில் ஜாட்,ராஜ புத்திரர்கள்,கூர்க்கர்கள் எனவும் மத்திய இந்தியாவில் கோண்ட்ஸ் என்ற இனத்தவரையும் தென்னிந்தியாவில் கள்ளர்,மறவர்,தோடர்,ஊராளிகள் என்று ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் 8பேரை மட்டும் தான் குறித்துள்ளார்.

அதில் அந்த மானிடவியலாளர் கள்ளர்,மறவரை பழங்குடியினராக அங்கீகரிக்க காரணம் அவர்களுடைய வீரம் தான், ஆம் அவர் கூற்றுப்படி காளையை அடக்குபவர்கள் மற்றும் காளையை வழிபடுகிறவர்கள் என்று குறிக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் கள்ளர்,மறவருடைய இந்த பண்பு மட்டும் கலாச்சாரம் சுமார் 3000 வருட பழமையான நாகரீகமான கிரேக்க மைசினாயியன் கலாச்சாரத்தில் நேரடி தொடர்பாக உள்ளது என்றும் அங்கும் சற்றும் மாறுபடாமல் காளை அடக்குவதும்,வழிபடுவதும் உள்ளது எனக் குறிக்கிறார்......!

ஆனால் கிரேக்கத்தில் அந்த கலாச்சாரம் சுமார் 1500 வருடங்களுக்கு முன்பே முடிந்துவிட்டது.

ஆனால் நாம் இன்றும் அந்த கலாச்சாரத்தை கைவிடமால் அதை பேணிப் பாதுகாத்து வருகிறோம்.


சிந்து சமவெளி நாகரிகத்திலும் ஒரு வீரன் காளையை அடக்குவது போல் ஓவியம் உள்ளது.

இன்றும் அனைத்து கள்ளர் நாடுகளில் ஜல்லிக்கட்டு,மஞ்சுவிரட்டு,வட மஞ்சுவிரட்டு என பாதுகாத்து வருகின்றனர் நம் மக்கள்.....!

நம் மக்களுக்கு இந்த நேரத்தில் ஒன்றை மட்டும் நினைவுபடுத்துகிறேன். நமது மரபே தாத்தா மூலம் தந்தைக்கு தந்தை மூலமாக மகனுக்கு என்று தான் இருந்துள்ளது.

ஆனால் இதை இன்றைய சினிமா உலகம் சிதைத்து வருகிறது, மரபு கடத்தலையும்,கலாச்சாரத்தையும் இழக்காதீர்கள்.

நன்றி
Peoples Of The World by Francis Huxley
அன்புடன்
சோழ பாண்டியன்
ஏழுகோட்டை நாடு