19ஆம் நூற்றாண்டின் மதுரை புறநகர் வேளாண்மை பிரச்சனையை சமாளிக்க பேரன்புக்கும்,பெருமதிப்பிற்கும் உரிய அய்யா பென்னி குக் லோகன் அவர்கள் முல்லை பெரியாறு அணையை வெற்றிகரமாக கட்டினார்.
அந்த அந்த முல்லை பெரியாறு திட்டத்தை பொருளாதார ரீதியாக அங்குள்ள மக்களுக்கு எப்படி பயன்படும் என ஆய்வு மேற்கொண்டார் பிரிட்டீஸ் பொருளாதார ஆய்வாளர் திரு.கில்பர்ட் ஸ்லேடர்.
அப்படி அவர் ஆய்வு மேற்கொள்ளும் போது மதுரையை பூர்வீகமாக கொண்ட கள்ளர் பழங்குடியினரின் பழக்கவழக்கங்களை பார்த்து வியந்தார்.
அப்படி அவர் வியக்க காரணம் இந்தியாவில் களவில் ஈடுபடும் எந்த மக்களையும் சமூகத்தில் இருந்து விலக்கி வைப்பது தான் வழக்கம்.
ஆனால் மதுரையில் கள்ளர் பழங்குடிகள் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்துடன் இருப்பது தான் அவர் வியக்க காரணம்.
இந்த முரண்பட்ட விசயத்திற்காக அவர் ஆய்வு மேற்கொண்ட போது இந்த கள்ளர் பழங்குடி மக்கள் இவ்வாறு களவில் மட்டும் நிற்க காரணம்,
விஜய நகர பேரரசு, பாண்டிய மன்னர்களை தோற்கடித்து பாண்டிய மன்னரின் கள்ளர் பற்றை கலைத்ததனால் தான் கள்ளர் பழங்குடிகள் வாழ்வாதாரத்திற்காக களவில் மட்டுமே நிற்கிறார்கள் என்கிறார்.
அவரது கூற்றுக்கு ஏற்றார்போல்,
பாரதமே போற்றிய பாண்டிய பேரரசு தங்களுக்குள் ஏற்பட்ட அரியணை உட்பூசலால் 14ஆம் நூற்றாண்டில் மதுரையை இழந்து திருவாடனை,கயத்தார்,தென்காசிக்கு தப்பி சென்று சிறு,சிறு பகுதிகளில் ஆட்சி செய்து வந்தனர்.
ஆனால் பாண்டியர்கள் வீழ்ந்தாலும், அந்த பாண்டிய பேரரசுக்கு கிழக்கு எல்லை காவலனாக இருந்த காரைக்குடி,தேவகோட்டை,திருப்பத்தூர், புதுக்கோட்டை கள்ளர்களும் அவர்களின் அரையர்களும் தன்னிச்சையாக மதுரை சுல்தானை எதிர்த்து போராடி தோல்வியை தழுவுகிறார்கள் (பார்க்க: சூரைக்குடி கள்ளர் பற்று) மேலும் இதே காலக்கட்டத்தில் கள்ளர் குல அரையர்கள் தங்களுக்குள்ளே போட்டி,பொறாமையின் காரணமாக பல உயிர் பலிகளையும் ஏற்படுத்தி வருகின்றன.
உதாரணம்: கிபி1411ல் இரு அரையர்கள் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தமும்,உயிர் பலியும்.
அதே காலக்கட்டத்தில் ஏற்பட்ட வலிமையான நாயக்கர் ஆட்சியும்,பாண்டியர்களின் வீழ்ச்சியும் கள்ளர்களின் வாழ்வாதாரத்தையும்,நிலம்,பாடிக்காவல் உரிமையும் இழக்கப்படுகிறது.
உதாரணம்: கிபி:1436,1450,1451 நரசிங்க நாயக்கர் காலத்தில் நாட்டை இழந்து ஊரைவிட்டு வெளியேரும் கள்ளர்கள்.
மற்றும் திருமலை நாயக்கருக்கும்,தனிக்காட்டு தன்னரசு கள்ளர் நாட்டுக்கும் நடந்த யுத்தம் வைகையில் இரத்த வெள்ளம் ஓடிய இரத்த சரித்திரமும் உண்டு.
பாண்டியர்களின் வீழ்ச்சி,சுல்தான்களிடம் ஏற்பட்ட போர் தோல்வி,நாயக்கரிடம் நிலம்,ஊர் படைப்பற்று இழத்தல் என வாழ்வாதாரத்தை இழந்த கள்ளர்கள் சூரையாடல்,வழிப்பறி,கலகங்கள் செய்தல் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
#குறிப்பு: “ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை”
நன்றி
Southern India by Mr.Gilbert Slater, D.Sc.(1936)
South Indian and Her Muhammadan by Mr.Krishnaswami Aiyangar, M.A.,(1921)
The Proceeding of the Indian History congress seventh session by Mr.Tara Chand(1944)
அன்புடன்
சோழ பாண்டியன்
ஏழுகோட்டை நாடு





