Thursday, October 18, 2018

தஞ்சை கள்ளர் படைப்பற்று


கிபி 1758 ஆகஸ்ட் மாதத்தில் மைசூர் மற்றும் பிரஞ்ச் கூட்டுப்படைகள் தஞ்சையை சூரையாட முற்பட்டு பல ஆயிரக்கணக்கான வீரர்கள்,குதிரைகள் மற்றும் பீரங்கிகளுடன் தஞ்சை வந்தடைந்தனர்
இந்த போரில் மிகவும் முக்கியமான நபரும் ஒட்டுமொத்த பிரஞ்சு படையின் கவர்னர் ஜென்ரலான Mr.Lally அவர்களே இந்த களத்தில் பங்குகொண்டது தான் சிறப்பம்சமே
இந்த மிகப்பெரிய போரில் மிக முக்கிய பங்காற்றியவர்கள் கள்ளர் பெருமக்களே, இந்த வரலாற்றில் தஞ்சை கள்ளர் பெருமக்களை பிரஞ்சுக்காரர்களும்,மைசூர் படையினரும்

“வெட்டுக்கிளி ஒரு காட்டில் புகுந்தால் எப்படி அந்த காடு சர்வ நாசம் ஆகுமோ அதேபோல் கள்ளர்கள் களம் புகுந்தால் அந்த போர்களம் முற்றிலும் அழிந்துவிடும்” என்கிறார்கள்




தஞ்சை கள்ளர்கள் பிரஞ்சு மட்டும் மைசூர் படையினரின் இராணுவ முகாமிற்கு புகுந்து அந்த முகாமை முற்றிலுமாக தகர்த்து இராணுவ தடவாளங்களை சூரையாடி சர்வ நாசம் செய்கிறார்கள்.
மேலும் கள்ளர்கள் மிகத்தந்திரமாக பிரங்கியை இழுத்து செல்லும் குதிரை மற்றும் எருதுகளை பாதிக்கும் மேல் கவர்ந்து சென்றுவிடுகிறார்கள்.
இதனால் பிரங்கியை நகர்த்தி சென்று எதிரிகளால் மறு தாக்குதல்கள் நடத்த முடியவில்லை.

இவ்வளவு வீரமாகவும்,தந்திரமாகவும் போர் புரியும் தஞ்சை கள்ளர் பெருமக்களை மைசூர் தளபதிகள் சையது மெஹக்ம்,அலிகான் மற்றும் பிரஞ்ச் மேஜர் பிரிஷ்டன் கொஞ்ச கள்ளர்களுக்கு மட்டுமே பதிலடி கொடுக்க முடிந்தது.
இந்த தாக்குதலால் நிலை குலைந்து குழப்பமான பிரஞ்ச் மற்றும் மைசூர் கூட்டுபடையினர் தோல்வியை தழுவுகிறார்கள். அவர்கள் பிரங்கியை இழுத்து செல்வதற்காக வைத்திருந்த எருதுகளும்,குதிரைகளும் கள்ளர்கள் கவர்ந்து சென்றதால் பல பீரங்கிகளை கைவிட்டு சென்றுவிடுகின்றனர்.
தாங்கள் கவர்ந்து வந்த குதிரைகளையும்,எருதுகளையும் வெற்றிக்காக போராடிய தஞ்சை மராட்டிய படையின் சிப்பாய்களுக்கு பகிர்ந்தளித்து மகிழ்கிறார்கள்.
மேலும் கவர்ந்து வந்த பீரங்கிகளையும்,தடவாளங்களையும் தஞ்சை மன்னர் பிரதாப் சிங்கிடம் கொடுத்து “சத்தியத்திற்கு கட்டுப்பட்டவர்கள் கள்ளர்கள்” என்பதை நிருபிக்கிறார்கள்.
தஞ்சை கள்ளர் பெருமக்களின் இந்த வீரத்தை போற்றி தஞ்சை மன்னர் பிரதாப் சிங் பலவிதமான பரிசுகளை அளித்து மகிழ்கிறார்.
கள்ளர்கள் இடத்தால் மாறுபட்டாலும் குணத்தாலும்,தோற்றத்தாலும் அவர்கள் ஒரே புள்ளியில் இனைகிறார்கள்.
#குறிப்பு: வரலாறு தெரியாத இனம் விரைவில் 
அடிமையாகும்

நன்றி
Madras university Islamic studies No.4
Source of the history of the Nawwabs of the carnatic by Mr.Burgan Ibn Hasan

அன்புடன் 
சோழ பாண்டியன்
ஏழுகோட்டை நாடு