Thursday, October 18, 2018

வானம் பொழிகிறது; பூமி விளைகிறது*





—————————————————————
தலைப்பை பார்த்தவுடன் அனைவருக்கும் நியாபத்திற்கு வருவது, கட்டபொம்மன் பிரிட்டிஸாருக்கு எதிரா பேசிய வீரவசனம்
ஆச்சே என்று...................🤦🏻‍♂️
—————————————————————
அப்படி அனைவருக்கும் இந்த வசனம் கட்டபொம்மனுடன் நியாபகம் வந்தால் உடனடியாக தலையில் எண்ணெய் தேய்த்து குளித்து விடுங்கள்........
—————————————————————
1750களில் பிரிட்டிஸார் மதுரை மண்டலத்தில் வரி வசூல் செய்யும் உரிமையை பெற்று தன்னரசு கள்ளர் நாட்டிற்கு வந்த பொழுது பிரிட்டீஸார் கள்ளர் நாட்டாரிடம் வரி கேட்ட போது அவர்கள் அளித்த பதில் என்னவென்று பிரிட்டிஸாரே புத்தகம் எழுதியுள்ளனர்.
—————————————————————
ராபர்ட் ஓர்ம்,s.c ஹீல்,எட்கர் தர்ட்சன் எழுதிய நூல்களில் பிரிட்டீஸ் அரசு தன்னரசு கள்ளர்களிடம் வரியை கேட்டது அதற்கு அவர்கள் அவமானம் அளிக்கும் வார்த்தைகளால் பதிலை அளித்தார்கள் என்று கூறுகிறார்கள்.
—————————————————————
கள்ளர்களின் பதில்:
“வானம் பூமிக்கு மழையைத் தருகிறது, எங்கள் வயலை நாங்கள் உழுது பயிரிட்டு உழைக்கிறோம். அதனால் கிடைக்கும் பிரதிபலனை எங்கள் மக்கள் அனுபவிக்கிறார்கள். இதில் என்ன காரணம் உள்ளது நாங்கள் உங்களுக்கு கீழ்பணிந்து வரி செலுத்துவதற்கு?”
—————————————————————
மேலும் அந்த புத்தகத்தில் அவர்கள் அந்த பதிலுக்கு ஏற்றால் போல் எங்களிடம் சண்டையிட்டார்கள் என்றும் கூறுகின்றனர்.
—————————————————————
இதை ஆங்கில ஆய்வாளர்கள் எழுதியதால் கொஞ்சம் நாகரீக வார்த்தைகளால் எழுதியுள்ளனர். உண்மையில் நம் மக்கள் எப்படி பேசியிருப்பார்கள் அதுவும் அவர்களை அவமத்திக்கும் வார்த்தைகளால் என்று கற்பனை பண்ணி பார்த்தால் என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
—————————————————————
பாவம் வெள்ளைக்காரனின் அம்மா,தங்கை,மனைவி,அப்பத்தா,அம்மத்தா😂
“வரியா வக்*லி யார்ட்ட வரி கேட்கிற?????????
—————————————————————
இந்த சினிமாக்காரர்கள் இந்த வசனத்தை கட்டபொம்மன் பேசியது மாதிரி அதுவும் ஒரு கள்ளர் பெருமகனையே வைத்து நடிக்க வைத்து நமக்கு விபூதி அடித்துள்ளனர் உறவுகளே😡
—————————————————————
அதை இந்த அரசியல்வாதிகள் பாடப்புத்தகத்தில் கட்டபொம்மன் பேசினார் என்று போட்டுள்ளனர்😡
—————————————————————
இன்னும் எதை எதை நம்மிடம் திருடியுள்ளார்கள் என்று தேட வேண்டிய கட்டாயத்தில்😒 😒😒தள்ளப்பட்டுள்ளேன்
—————————————————————
தன்னரசு கள்ளர் பெருமக்களே என்று எழுச்சியடைவீர் உன் முன்னோர் போல்.
—————————————————————
💦மது,💦மாது,💦சினிமா🤦🏻‍♂️ வேதனையாக உள்ளது
—————————————————————
நன்றி
The rebel commandant by S.C Hill
East india magazine by R.Alexander
Castes and Tribes of south India by Edger thurston
அன்புடன்
சோழ பாண்டியன்
ஏழுகோட்டை நாடு