🧚🏻♂️மதுரை 2500வருடம் தொடர்ந்து நகரமாக இருக்கும் உழகின் பழமையான கலாச்சாரம் கொண்ட பழந்தமிழனின் ஆதாரமாக இன்றும் மிடுக்கோடு மிளிரும் நகரம்.
கிபி1750வாக்களில் மதுரை மீது தாகம் கொண்ட பிரிட்டீஸ் ஏகாதிபத்தியம், மதுரையை தங்கள் காலுக்கு கீழ் கொண்டுவர என்னி வரும் போது அந்த மண்ணின் பூர்வீக போர் பழங்குடியினரான கள்ளர்கள் பிரிட்டீஸ் ஏகாதிபத்தியத்தை காலூண்டும் போது அவர்கள் கால் வைக்கும் இடமெல்லாம் கன்னிவெடியாய் வெடித்து சிதறடித்துள்ளனர்.
மதுரையை கைப்பற்ற வேணும் என்றால் அந்த இனக்குழுவை கருவருத்தால் மட்டுமே முடியும் என நினைத்த பிரிட்டீஸ் ஏகாதிபத்தியம் மதுரை மண்டலத்தில் உள்ள வெள்ளலூர் நாடு,மேலூர் நாடு,ஆனையூர் நாட்டில் உள்ள கள்ளர்களில் பெரும் பகுதி மக்களை கருவறுத்த பின்பே அவர்களால் மதுரையில் ஆட்சி செலுத்த முடிந்தது.
இருந்தாலும் இந்தியா சுதந்திரம் அடையும் வரை பிரிட்டீஸாருக்கு சிம்மசொப்பனமாகவே திகழ்ந்துள்ளனர்,அதற்கு அந்த பழங்குடியினருக்கு கிடைத்த பரிசு குற்றப்பரம்பரை😒
அதனால் தான் என்னவோ அனைத்து பிரிட்டீஸாரின் குறிப்புகளில் இந்த பழங்குடியினரின் தாக்கம் அதிகமாவே உள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் Cornell universityயில் உறங்கிக் கொண்டிருக்கும் புத்தகம் தான் YUSUF KHAN (THE REBEL COMMANDANT)
1750களில் நடந்த வரலாற்று சம்பவங்களை பல புத்தங்களாக எழுதியுள்ள பிரிட்டீஸ் இந்தியாவின் முன்னால் கல்வித்துறை மற்றும் அரசு ஆவணக்காப்பாளுருமான S.C.Hill யூசப்கானை பற்று தனது புத்தகமான YUSUF KHAN (THE REBEL COMMADANT) என்கிற புத்தகத்தில் மதுரையை பற்றி விளக்கும் போது அங்கே வாழும் கள்ளர் பழங்குடியினரை பற்றி விளக்கியுள்ளார்.
அதாவது கள்ளர் இனம் என்பது மதுரையில் பூர்வீக போர் பழங்குடியினர் என்றும் மதுரை சுற்றியுள்ள குறிஞ்சி(மலை),முல்லை(காடு) நிலப்பரப்பை வைத்திருக்கும் நிலவுடைமையாளர்கள் என்றும் குறிக்கிறார்.
காடு,மலைகளில் தனக்கென்று ஒரு ரகசிய பாதையை வைத்து பிரிட்டீஸாரை பயமுறுத்தியும் உள்ளனர்.
மேலும் கள்ளர்களின் ஆயுதமான வளரியை திறம்பட பயன்படுத்துதல், எப்போதும் தங்களது இருப்பிடத்தை சுற்றி கோட்டையை கட்டமைத்தல், வழித்தடங்களில் கோட்டை போண்ற தடையை ஏற்படுத்துதல் என குறிக்கிறார்.
இதைவிட முக்கியமான விசயம் என்னவென்றார் கிபி1757ல் டெல்லியில் உள்ள பிளாசி என்ற இடத்தில் நடந்த பிளாசிப்போரில் வெற்றி பெற்று இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியை கொண்டுவந்த இராபர்ட் கிளைவ் எனும் பிரிட்டீஸ் தலைமை இராணுவ தளபதி திருச்சியில் 1754ல் தனது இனை தளபதி லாரன்ஸ் உடன் முகாமிட்டுள்ள போது அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து குதிரைகளையும் திருச்சி கள்ளர்கள் கவர்ந்து சென்றுவிட்டார்கள்.
ஒரு பிரிட்டீஸ் இந்திய கவர்னர் ஜென்ரலின் தண்ணிகாட்டியவர்கள் தான் திருச்சி மண்டலத்தில் வாழ்ந்த கள்ளர்கள்.
மேலும் அந்த நூலில் கள்ளர்கள் பிராமணத்தில் விருப்பம் இல்லாதவர்கள் என்றும் தங்களுடைய நாட்டார் வழிபாட்டில் மட்டும் நம்பிக்கையுள்ளவர்களாகவும் அதற்கும் தங்கள் தலைவருக்கும் மட்டுமே விசுவாசமாக இருந்துள்ளனர் என்று குறிக்கிறார்கள்.
தயவுசெய்து கள்ளர் பழங்குடியினர் தங்களது வரலாறை படித்து அதனை அடுத்த தலைமுறைக்கு கடத்தி இளைஞர்களை போதை வஸ்துக்கள்,சினிமா போதை,மாது போதை போண்றவற்றில் இருந்து அவர்களை மீட்டு நாட்டார் வழிபாட்டையும்,குல முன்னோர்களின் இரத்த சரித்திரத்தையும் போற்ற இருகரம் கொண்டு இந்த பதிவின் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
Yusuf Khan (the rebel commandants)
🙏S.C.Hill🙏
அன்புடன்
சோழ பாண்டியன்
ஏழுகோட்டை நாடு
சோழ பாண்டியன்
ஏழுகோட்டை நாடு








