Thursday, October 18, 2018

சுல்தானுக்கு எதிரான சூரைக்குடி கள்ளர் பற்று





கிபி1310வாக்களில் பாரதம் போற்றிய பாண்டிய மன்னர்களான சுந்தர பாண்டி,வீர பாண்டி தங்களுக்குள் ஏற்பட்ட சகோதர யுத்தத்தால் மாலிக் கபூரால் மதுரையை இழந்து டெல்லி சுல்தான் ஆட்சிக்கு ஆட்சாரம் போட்டுவிட்டு தென்காசிக்கும்,திருவாடனைக்கும் தப்பி சென்று சிறு பகுதியில் ஆட்சி செய்து வந்தனர்.

ஆனால் இதனை ஏற்காத கள்ளர்கள் வாழ்ந்த அப்போதைய மதுரை எல்லையில் அதாவது இன்றைய புதுக்கோட்டை எல்லையான காரைக்குடி,தேவகோட்டை பகுதிகளில் பாண்டியர்களுக்கு எல்லை அரையர்களாக(சிற்றசர்) இருந்த சூரைக்குடி தொண்டைமான்களும் அவர்தம் கள்ளர் குலத்தவர்களும் மதுரை சுல்தானுக்கு அடங்காமல் கலகம் செய்து வந்தனர்.

சூரைக்குடி கள்ளர் படைகள் மதுரை சுல்தானின் தளபதிக்கு கட்டுப்பட்ட பொன் அமராவதி நாடான விராச்சிலை,கோட்டையூரில் சுல்தான் படைகளையும்,ஊர்களையும் தாக்கி சூரையாடி பெரும் சேதத்தை தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றனர்.

இதனால் கோபமுற்ற சுல்தான் தனது முதன்மை தளபதியான இராஜாதி கான் தலைமையில் மூன்று உப தளபதிகளான மஞ்சிலிஸ் எலிஸ் கான்,ஆசாம் கான், முவாசம் கான் மற்றும் அவர்தம் பெரும் படைப்பற்றை வைத்து சூரைக்குடி கள்ளர் படைப்பற்றை தீக்கிரையாக்கி முற்றிலுமாக 😓அழித்து தரைமட்டமாக்கிறார்கள்.

அழித்தது மட்டும் இல்லாமல், சுல்தான் மாத்தூர் குளத்தில் பொன் அமராவதி நாடான விராச்சிலை மட்டும் கோட்டையூர் நாட்டுக்கூட்டத்தை கூட்டச் சொல்லுகிறார்.


அப்படி அந்த பொன் அமராவதி நாட்டுக்கூட்டத்தில் எங்களுக்கு எதிராக வாளை சுழட்டிய கள்ளர்களையும் அவர்களது தலைமை இடமான சூரைக்குடியையும் அழித்துவிட்டோம்.

இனி எங்களுக்கு எதிராக யாரும் வாளை சுழட்டினால் சூரைக்குடி கள்ளர் பற்றுக்கு என்ன நேர்ந்ததோ அதே கதிதான் இந்த தேசத்தில் உள்ள அனைவருக்கும் ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள்.

இந்த சம்பத்தை திருக்கோலக்குடி நாயனார் கோவிலில் கல்வெட்டாக வெட்டியுள்ளனர்.

அந்த கல்வெட்டை தொல்லியல் ஆய்வாளரான உயர் திரு.சாமிநாத அய்யர் படி எடுத்து வைத்துள்ளார்.


ஒவ்வொரு காலக்கட்டங்களிலும் தங்கள் நாட்டுக்காகவும்,மண்ணுரிமைக்காகவும் நம் முன்னோர்கள் சிந்திய இரத்தம் கொஞ்சம் நஞ்சம் அல்ல என் மக்களே....!

இன்றும் காரைக்குடி,தேவகோட்டை பகுதிகளில் கள்ளர்கள் அம்பலமாகவும்,நாட்டு சேர்வையாகவும் அனைத்து குடிமக்களுக்கும் நீதிபரிபாலனம் செய்தும் 150க்கும் மேற்பட்ட கோவில்களில் சாமி கழுத்தில் உள்ள துண்டையே முதல் மரியாதையையாகவும்,காளாஞ்சியமும் பெறுகிறார்கள்.

அப்படி அவர்கள் வாழக் காரணம் அவர்களின் முன்னோர்கள் இந்த தமிழ் மண்ணுக்காக சிந்திய இரத்தம்......!

இந்தப் பதிவை சூரைக்குடி கள்ளர் பற்றில் இறந்த அனைத்து மக்களுக்காக சமர்பிக்கிறேன்.......

நன்றி
South Indian And Her Mohammadan Invaders by Honourable Mr.Krishnaswami Aiyangar

அன்புடன்
சோழ பாண்டியன்
ஏழுகோட்டை நாடு