கிபி1659 மார்ச் 19ஆம் நாள் பிஜபூர் சுல்தான் அதில் ஷாவின் ஆனைக்கினங்க அவருடைய தளபதிகளான சகோசி,முலாவின் தலைமையில் ஒரு பெரும் படையை தஞ்சையை கைப்பற்ற அனுப்பி வைக்கிறார்.
அப்படைகள் திருச்சி வல்லம்,மலைக்கோவில் போண்ற இடங்களில் நாயக்கர் படையை தோற்கடித்த பின்னர் தஞ்சையில் திடீர் தாக்குதலை மேற்கொள்கின்றனர்.
தஞ்சை வந்த முகலாய பெரும் படைக்கு அப்போது தஞ்சை ஆண்ட நாயக்கர் படையை விட கள்ளர் படைப்பற்றை பார்த்து அஞ்சி நிலைகுலைந்து போகிறார்கள்.
அந்த நிகழ்வை அக்காலத்தில் வாழ்ந்த ஒரு பாதிரியார் “முகலாயப்படை நாயக்கர் படையை விட கள்ளர் படையை பார்த்து பயந்தனர்” என்று குறிக்கிறார்.
அதுமட்டு இல்லாமல் பிஜபூர் தளபதிகள் சகோசி,முலா செஞ்சி,திருச்சி,தஞ்சையில் கொள்ளையடித்து வைத்த செல்வங்களை கள்ளர் பெருங்குடிகள் அத்தனையும் கவர்ந்து செல்கின்றனர்.
கள்ளர்களின் இந்த மூர்க்கத்தனமான தாக்குதலாலும்,தந்திரத்தாலும் பிஜபூர் தளபதிகள் சகோசியும்,முலாவும் நாயக்கர் மன்னரிடம் கொஞ்சம் பணத்தை பெற்று தஞ்சையை விட்டு வெளியேறுகின்றனர்.
தஞ்சையை ஒவ்வொரு அந்நியபடையெடுப்பிலும் சோழ தேச காவலராக காவிரி ஆற்றின் வெள்ளப்பெருக்கு போல் கள்ளர் பெருங்குடிகள் தங்களுடைய குருதியை தஞ்சைகாவலுக்காக சிந்தியுள்ளனர்.
குறிப்பு: வரலாறு தெரியாத இனம் விரைவில்
அடிமையாகும்
நன்றி
HISTORY OF NAYAKS by Mr.Sathiyanatha Aiyar
அன்புடன்
சோழ பாண்டியன்
ஏழுகோட்டை நாடு


