Thursday, October 18, 2018

மணப்பாறை எனும் கள்ளர் படைப்பற்று



திருச்சியில் இருந்து சுமார் 38கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் ஊர் தான் மணப்பாறை.

இந்த மணப்பாறை என்ற ஊர் பெயரை சொன்னவுடனே எல்லோர்க்கும் நினைவில் வருவது மணப்பாறை முறுக்கு தான்.அதை தவிர அந்த ஊரின் சிறப்பு என்னவென்று கேட்டால் எல்லோரும் தனது ஆள்காட்டி விரலை தலையில் வைத்து ஆழ்ந்த தியானத்திற்கு சென்று விடுவர்.



ஆனால் அங்கு 18ஆம் நூற்றாண்டில் மணப்பாறையில் ஒரு தன்னரசு நாடும் அவர்தம் இராணுவப்படைப்பற்றும் அங்கு தான் இருந்துள்ளது.

ஆம் 1750வாக்களில் கான் சாஹிப் எனும் யூசப்கான் கிழக்கிந்திய கம்பெனி இரானுவத்துடன் இனைந்து மதுரை,திருச்சி,நெல்லை என தென் மண்டலங்களை கைப்பற்றும் முனைப்பில் இரத்தவெறியுடன் சுற்றித் திரிந்த காலம்.

அதாவது 1757 பிளாசிப்போர் மூலம் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை தனது கைக்குள் கொண்டு வந்த காலம் அது.


அப்படி கான் சாஹிப் @ யூசப்கானும் அவர்தம் படைகளும் தென்மண்டலத்தில் ஆதிக்கம் செலுத்தும் போது 1755ல் கான் சாஹிப் முதல் வரலாற்று சாதனையாக ஆய்வாளர்கள் கருதுவது “stroming of the Kallar barrier” அதாவது கிழக்கிந்திய படை மற்றும் நவாப் படையோடு கான் சாஹிப் மணப்பாறையில் உள்ள கப்பம் கட்ட மறுத்த தன்னரசு கள்ளர் படைப்பற்றை வென்றதாக கருதப்படுகிறது.

மேலும் அந்த கள்ளர் படைப்பற்று திருச்சி எல்லையில் அரண் போல இருந்ததாகவும் குறிக்கிறார்கள். மேலும் அந்த படைப்பற்றின் அழிவை வைத்து மணப்பாறை தன்னரசு கள்ளர்களின் தலைவரை கப்பம் கட்ட கட்டாயப்படுத்தியுள்ளர்.

குறிப்பு:

தஞ்சை மண்டல கள்ளர்கள் போர் செய்யவில்லை எனச் சொல்லும் மூடர்களுக்கு இந்த பதிவு சமர்பணம். (கள்ளர்களின் அவர்தம் இடத்தை வைத்து தான் பிரிக்கப்பட்டதே தவிர குணத்தை வைத்து அல்ல)


மேற்கோள் நூல்
Saints,goddesses and
Kings
அன்புடன்
சோழ பாண்டியன்
ஏழுகோட்டை